பக்கம்:வேத வித்து.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கலையே ?ே வா, பார்க்கலாம்' என்று அவனைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றாள். கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு 'எப்படி இருக்கு' என்று கேட்டாள். "ரொம்ப அழகா இருக்கு' என்றான். 'உன்னாட்டம்' என்றாள். "கிட்டா இல்லையா? எங்கே போனான்?" - "காஞ்சீபுரம் போயிருக்கான். ரெண்டு ாேளாகும் வர பங்குனி உத்திர்ம் பார்த்துட்டு வந்துருவான். ே இன்னைக்கே போகனுமா?" தெரியலை, கனபாடிகளைத்தான் கேட்கணும்' என்று பிடிகொடுக்காமல் பேசினான். 'திருக்குறள் புஸ்தகத்துக்கு அட்டை போட்டு அனுப்பி யிருந்தனே, பர்த்தயர்?" "...பார்த்தேன். உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். அந்தத் கடனை எப்ப எப்படி திருப்பித் தரப் போறேனோ, தெரியலை...' 'அதிக்கென்ன? சந்தர்ப்பம் வராமலா போயிடும்? அப்ப வட்டியும் முதலுமாச் சேர்த்துக் கொடுத் துடு. அது சரி; அட்டைக்குள்ளே வேற ஒண்னும் பார்க்கலையர்' 'பார்த்தனே!...' "அதைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டேங்கறயே!' 'எனக்கு பயம்மா இருக்கு..." என்றான். "என்ன பயம்? ஏன் பயப்படறே? எதுக்கு பயம்' "உன்னை நினைச்சுத்தான்..." "என்னைப் பிடிக்கலையா உனக்கு?" 'பிடிக்கிறது...' 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/141&oldid=918672" இலிருந்து மீள்விக்கப்பட்டது