பக்கம்:வேத வித்து.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கினபாடிகள் தந்த கடிதத்தை மூர்த்தி மெளனமாகவே படிக்கவும், " உரக்கவே வாசிக்கலாம், பரவாயில்லை' என்றார். 'உரக்கவா? எதுக்கு' என்று யோசித்துவிட்டு உரக்க வாசிக்கத் தொடங்கினான். சங்கர கனபாடிகளுக்கு கிட்டப்பா சாஸ் டாங்க நமஸ்காரம் பண்ணி எழுதிக்கொண்டது கலியாணத்துக்குத் தாங்கள் வருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏதோ இக்கட்டான நிலை காரணமாகத் தங்களால் வர முடியவில்லை என்று கிட்டா மூலம் அறிந்து கொண்டேன். * மூர்த்தி இங்கேயே சப்தரிஷி பாடசாலையில் சேர்ந்து விட்டான். அவனைப் பற்றிய கவலை வேண்டாம். மிக உத்தமமான பையன். சமையல் வேலைக்கு ஆள் தேவை என்று கடிதம் எழுதியிருந்தீர்கள். - ஆனந்தராவ் என்பவரை அனுப்பியிருக்கிறேன். ரொம்ப சாதுவான மனிதர். நளபாகமாய்ச் சமைப்பார். அவருக்குத் துணையாக மூர்த்தி வருகிறான். கிற்க, சிதம்பரத்திலுள்ள தங்கள் சகோதரி கெளரி அம்மாளும் அவள் புருஷனும் இங்கே வந்திருந்தார்கள். ஒரு கல்ல பிள்ளையாகப் பார்த்து சுவீகாரம் எடுத்துக்கொள்ளப் 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/148&oldid=918685" இலிருந்து மீள்விக்கப்பட்டது