பக்கம்:வேத வித்து.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தச் சமயம் அருகிலிருந்த வைக்கோல் போரிலிருந்து வந்த பாம்பைக் கண்டு பதறிப் போன மஞ்சு "ஐயோ' என்று அலறினாள். பெரிய கல் ஒன்றை எடுத்து அதன் மீது எறியப் போனாள். - வேணாம். பாம்பை அடிக்காதே, அது பாவம்' என்று தடுத்தான் மூர்த்தி. "சும்மாவிட்டா, அப்புறம் அது கம்மையே கடிக்கும்...' 'கடிச்சா கான் மந்திரம் போட்டு விஷத்தை இறக்கிடறேன். கனபாடிகள் எனக்கு கத்துக் கொடுத்திருக்கார்...' 'இந்த முர்த்தி ஏன் இவ்வளவு நல்லவனாயிருக்கார்! கடிக்க வர பாம்பை அடிக்கக் கூடாது என்கிறார். கொல்ல வர ஆளுக்கு நல்லது செய்யப் போறேங்கறார். என்னால இவரைப் புரிஞ்சுக்கவே முடியலே' என்று மனதுக்குள் வியக் தாள். மஞ்சுவின் உள்ளத்தில் முர்த்தி விசுவருபமாய் உயர்ந்து கின்றான். - முர்த்தி எதிரில் வந்து கின்றதைக்கூட கவனிக்காமல் கிட்டப்பா சுதேசமித்திரனில் முழ்கியிருந்தார். ஒருமுறை கனைத்து தான் வந்திருப்பதை சூசகமாகக் காட்டிக்கொண்டான் மூர்த்தி. 'அட, யோ! வா' என்றவர் "பேப்பர் ல பாத்தயா? பஞ்சம் வந்தாலும் வரும்னு போட்டிருக்கான். இப்படி மழையே இல்லாமப்போனா அப்புறம் ஜனங்க ரொம்பக் கஷ்டப்படுவா. கனபாடிகளை அழைச்சுண்டு வந்து விராடபர் வம் வாசிக்கச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்' என்றார் கிட்டப்பா. "அவருக்கு உடம்பே சரியில்லையே. உள்ளுர்லயே விராட பர்வம் வாசிக்கணும்னு ஊரார் வந்து கேட்டுண்டாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டாராம். பாகீரதி சொன்னாள்' என்றான் முர்த்தி, 'பாவம், இந்த வயசான காலத்துல பாகீரதி விசாரம்ே பாதி அவருக்கு' என்றார் கிட்டப்பா. - - 'உங்க கிட்ட ஒரு சின்ன உதவி...' 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/159&oldid=918710" இலிருந்து மீள்விக்கப்பட்டது