பக்கம்:வேத வித்து.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இதுக்குப் பதிலா ஒரு குடம் தண்ணி கொண்டு வந்திருந்தா ரொம்ப உபயோகமாயிருக்கும்' என்றான் கிட்டா. 'தண்ணிக்கு அவ்வளவு பஞ்சம் வந்துட்டுதா, இங்கே? சிதம்பரத்துல பரிவாயில்லே' என்றாள் கெளரி. "பஸ் லேட்டோ?' என்று கேட்டார் கனபாடிகள். "ஆமாம்; நடு வழில பஞ்ச்சர்' என்றார் கெளரியின் கணவர், கல்கண்டு, திராட்சை, மாம்பழம், மாதுளம்பழம், வாழைப் பழம் வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து கனபாடிகள் காலில் விழுந்து மேஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பண்ணுங்க!' என்றனர் கெளரி தம்பதியர். "முகூர்த்தம் எப்ப வெச்சுக்கப் போறேள்?' என்று கேட்டு, அந்த ஒரு கேள்வியிலேயே சுவீகார சமாசாரம் பூராவும் மறுபடி ஒருமுறை பேச வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார் கனபாடிகள். 'உங்களுக்கு எப்ப வர செளகரியப்படுமோ, அப்ப வெச்சுக்கலாம்' என்றார் கெளரியின் கணவர். “சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து கடத்திடவேண்டி யதுதான்!' என்றார் கனபாடிகள். 3. "நீங்க வரணும்; அதுதான் முக்கியம்.' "என்னால முடியும்னு நினைக்கிறயா, கெளரி வரவர உடம்பு ரொம்ப பலகீனம் ஆயிண்டிருக்கே?" "முகூர்த்தம் கடக்கறப்போ நீங்க இருக்கணும். காலைல வந்து மூர்த்தியை ஆசீர்வாதம் பண்ணிட்டு சாயந்திரமே திரும்பிடலாம், காங்க ஒரு ப்ளெஷர் ஏற்பாடு பண்ணி அனுப்பறோம்' என்றார் கெளரியின் கணவர். கிட்டா, அந்த பஞ்சாங்கத்தை எடு' என்றார் கனபாடிகள். கிட்டா பஞ்சாங்கம் கொண்டு வந்தான். i80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/165&oldid=918724" இலிருந்து மீள்விக்கப்பட்டது