பக்கம்:வேத வித்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருப்பாள் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு 6uתן மூர்த்தி கண்களில் நீர் தளும்ப அம்மா' என்று புலம்பி விட்டான். இதற்குள் பாகீரதி சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு, "ஆச்சாடா மூர்த்தி? இலை போடலாமா? அப்பா காஞ்சீபுரம் புற்ப்படப் போறதாச் சொன்னார். பிரயாணத்துக்கு உச்சி வேளை ரொம்ப நல்லதாம்' என்று துரிதப்படுத்தினாள். மூர்த்தி வாழைப்பட்டைகளைச் சிவிக் கொண்டிருந்த போது கூர்மையான கத்தி அவன் கை விரல்களைப் பதம் பார்த்துவிட, குப்பென்று ரத்தம் பெருக பாகீ..' என்று அலறிவிட்டான். பாகீரதி ஓடி வந்து ரத்தப் பெருக்கில் கனைக் திருந்த அவன் விரல்களை ஈரத் துணியால் துடைத்து சுண்ணாம்பு வைத்துக் கட்டினாள். 'உனக்கு என்னமோ ஆயிருக்கு. உன் புத்தியெல்லாம் எங்கேயோ லயிச்சிருக்கு. என்னதான் நடந்தது? மறைக்காமச் சொல்லுடா! எதுக்கு ரெண்டு தரம் ஸ்நானம் பண்ணினே?" என்று கேட்டாள். மூர்த்தி மெளனமாயிருந்தான். "பதில் சொல்லுடா? ஏன் பேச மாட்டேங்கறே?' அவன் கழுத்தில் துண்டு போர்த்தியிருந்தான். "பிரம்மசாரி மேல்துண்டு போடக் கூடாது. இடுப்பு வேட்டியோடுதான் இருக்கணும்னு சாஸ்திரம் சொல்லுவயே, இன்னைக்கு நீயே போட்டுண்டிருக்கயேl' என்று அவன் கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த துண்டை இழுத்து அகற்றியவள், "என்னடா உன் கழுத்து வெறிச்சோடிக் கிடக்கு? சங்கிலி எங்கே?' என்று கேட்டுக்கொண்டே அவன் கழுத்தைத் தடவிப் பார்த்தாள். வாழைத் தண்டு போன்ற வாளிப்பான அவன் கழுத்தை தடவியபடியே, "எத்தனை அழகுடா உன் கழுத்து வாழைத் தண்டு மாதிரி' என்று ரசித்தாள். அவனுக்குக் கூச்சமாக இருந்தது. 'இதுகாள் வரை என்னைத் தொட்டுப் பேசாத இந்த பாகீரதிக்கு இன்று மட்டும் இத்தனை துணிச்சலும் சுவர்தீன்மும் எப்படி வந்தது?" என்று யோசித்தான்.

20

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/22&oldid=1281556" இலிருந்து மீள்விக்கப்பட்டது