பக்கம்:வேத வித்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எப்படிச் சொல்றே?...' "ஆயிரம் ஐந்நூறுன்னு ஒவ்வொருத்தருக்கும் க - ன் கொடுத்து வைச்சிருக்காரே, இவர். இந்தக் காலத்துல யார் கடன் கொடுப்பா? எல்லாருமே எங்களுக்கு தாட்சண்யப்பட்டவா தான். எங்க பேச்சை யாரும் மீற மாட்டா.' "இவாளும் அந்த அளவுக்குப் போவான்னு தோணல்லே. ஏதோ இப்ப ஒரு வேகம்...' கமலா குறுக்கிட்டு 'எனக்கு ஒண்ணு தோண்றது. அத்தை! எல்லாரும் காஞ்சிபுரத்துக்கே போயிட்டா என்ன?' என்றாள். 'அதெல்லாம் சரியா வராது கமலா. உனக்கு அந்த வீட்ல உரிமை இருக்கலாம். எனக்கு அது சம்பந்தி வீடுதானே? அவர்கள் வீட்டிலே போய் திவசம் பண்றேன்னு சொல்றது நியாயமில்லே. சுப காரியமாயிருந்தால் பரவாயில்லை. இது அப்படி இல்லையே' என்றார் கனடாடிகள். "அது சரி அண்ணா! இத்தனை நாளா கானும் கேட்ட தில்லை. நீயும் சொன்னதில்லை. எவ்வளவோ சாஸ்திரம் படிச்சிருக்கே. யாகம் பண்ணிருக்கே, சிரோமணிப் பட்டம் வாங்கிருக்கே. வேதவித்தாயிருக்கே. இவ்வளவும் இருந்தும் நீயே பாகீரதியை தலைமயிரோட இருக்க எப்படி சம்மதிச்சேங் கறதுதான் ஆச்சரியமாயிருக்கு' என்றாள் கெளரி. "தசரதர் கைகேசிக்கு வரம் கொடுத்த மாதிரி நானும் பாகீரதியின் அம்மாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டேன். அந்த சத்தியம்தான் என்னை இப்படி சிரமப்படுத்தறது. 'பாகீரதியைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாச்சே அவள். 'கான் கண் மூடறதுக்கு முன்னால பாகீரதிக்கு ஒரு கல்ல இடமாப் பார்த்து கலியாணத்தைப் பண்ணி முடிச்சுடுங்க. அப்பத்தான் கிம்மதியாப் போவேன்’னு என்னிடம் சொல்லிக் கண்ணிர் விட்டாள்.

83

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/85&oldid=1281619" இலிருந்து மீள்விக்கப்பட்டது