பக்கம்:வேத வித்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பையனைத் தேடிப் பிடிக்கு பாகீரதி கல்யாணத்தை முடிச்சேன். பாவம், பாகீரதி கொடுத்து வைக்கலே. ஒரு வாரத்துக்கெல்லாம் அவள் மாங்கல்யத்தை இழந்துட்டா. அடுத்த வருஷமே பாகீரதியின் அம்மா மாடு முட்டிக் கீழே விழுந்தவள் தான். அப்புறம் அவளும் எழுந்திருக்கலே. அந்த சமயத்துலதான் ஒரு நாள் பாகீரதி சின்ன வயசுப் பெண். அவளை அலங்கோலப் படுத்திடாதீங்க!' என்று என்னைப் பார்த்து கெஞ்சி, சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாள். செய்து கொடுத்துட்டேன்." இந்தச் சமயம் அங்கே வந்த கமலா 'அத்தை உங்களை பாகீரதி உள்ளே வரச் சொல்றா?' என்றாள். ‘'எதுக்கு?..." "உங்களுக்குப் பிடிக்கும்னு ரொம்ப ஆசையா தவலை அடை பண்ணி யிருக்கா, உங்க ஆசை மருமாள்' என்றாள் & tశ# "கெய் வாசனை மூக்கைத் துளைக்கிறதே!" என்று சொல்லிக்கொண்டே அத்தை சமையலறையை .ே க் கி ப் போனாள். அத்தை அந்தப் பக்கம் போனதும் "அப்பா! மூர்த்தி கடுதாசி எழுதியிருக்கான்னு சொன்னயே, அதைக் கொஞ்சம் கொடுங்க பார்க்கலாம்" என்றாள் கமலா. "நீ இன்னும் பார்க்கலையா அதை? இங்கதான் ராமாயண புஸ்தகத்துல வச்சிருந்தேன, கொஞ்சம் இரு' என்று கூறி அந்தப் புத்தகத்தை எடுத்துத் தேடின்ார். கடிதத்தைக் காணவில்லை, இதில்தானே வச்சிருந்தேன்' என்றார். "இந்தா, இதோ இருக்கு" என்று தன் கையிலிருந்த கடிதத்தைக் கனபாடிகளிடம் நீட்டினாள் கம்லா. 'இது எப்படி உன் கைக்கு வக்கது' என்று ஆக்சரியப் பட்டார் கனபாடிகள். "கூடத்துல படத்துக்குப் பின்னால் இருந்தது?" 'கான் அங்கே வைக்கலையே?" 'சரி நீங்களும் வைக்கலே. நானும் வைக்கலே... அப்புறம்...?"

86

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/88&oldid=1281622" இலிருந்து மீள்விக்கப்பட்டது