பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 61

தனக்குத்தானே பயந்து, வன்முறை உணர்விலிருந்து தன்னை, விடுவித்துக் கொள்வதற்காக, பகல் பன்னிரெண்டு மணிக்கே புறப்பட்டான். உள்ளே வந்த அன்னத்திடம் பேசாமல், அவன் பாட்டுக்கு வெளியேறினான். வீட்டில் போய் உடம்பைக் கிடத்தனும், போட்டோஸ்டெட் விவகாரம் நாளைக்குத்தான்.

7

வசந்தா, ஜன்னலோடு ஜன்னலாகச் சாய்ந்து, அதற்குத் திரைச்சீலையாய் நின்றாள். கையில், ஒப்புக்கு ஒரு புத்தகம் இருந்தது. எதிர் வரிசை வீட்டின் இரண்டாவது மாடியில், அவனும், ஜன்னலில் சாய்ந்து நின்றான். அவன் கீழே பார்க்க, இவள் மேலே பார்க்க, ஒரே பரமானந்தம். செக்கச் செவேல் உடம்பில், வெள்ளை டி சட்டைப் போட்டு, அவன் அழகாகத்தான் இருந்தான். அவளுக்குத் திடீரென்று பயம் வந்தது. சமயலறைக்குள் இருக்கும் அண்ணி பார்த்து விடுவாள் என்றோ, தனக்குப் பின்னால், வெறுந்தரையில் வெறுமனே படுத்திருந்த அம்மா கண்விழித்துப் பார்த்து விடுவாளோ என்ற பயம் அல்ல. ஒருத்தியை அடக்கிவிடலாம். இன்னொருத்தியை ஏமாற்றிவிடலாம். அதுவல்ல அவள் பிரச்சினை. அவன், சிவப்புக் கைக்குட்டையை எடுத்து அவளைப் பார்த்து ஆட்டுகிறான். கண்களை, வலிப்பு வந்தவன் போல் வெட்டுகிறான்.

கடந்த ஒரு மாத காலத்தில், பலதடவை அவனை ஜன்னலோரம் பார்க்கிறாள். ஆனால், இன்றுதான் அவன் சைகை செய்கிறான். வசந்தாவுக்கு. சிவப்புத் துணி அபாயம் போலவும் தோன்றியது. அவனோ, பைத்தியம். பைத்தியம் என்று சொல்லுவது போல், தன் தலையை, அவள் தலையாக நினைத்து அடித்துக் கொள்கிறான். அவளுக்கு, அவனைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அங்குமிங்கும் பார்த்தபடி, லேசாய். லேசாய். புத்தகத்தை எடுத்து ஆட்டுகிறான். அங்கே நூலால் உருவான துணி இங்கே துணி மாதிரி இருந்த நூல். இரண்டும் ஆடிக் கொள்கின்றன. முகங்களும் ஆட்டிக் கொள்கின்றன.

திடீரென்று சத்தம் கேட்டு, வசந்தா திரும்பினாள். நிலைகுலைந்தாள். சரவணன் வந்து, ஓசைப்படாமல் பின்புறமாய் நிற்கிறான். உனே அவள் கையில் இருந்த புத்தகத்தால், முகத்தை மூடிக் கொண்டாள். புத்தக விளிம்பு வழியாக, அண்ணனை நோட்டமிட்டாள்.