பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வளரும் இன்பத்தின் மர்மம். செய்யும். பெருந்தீனிக்காரன் தனது ஒழிந்து போன பசியை எழுப்புவதற்காக எவ்வாறு புதிய புதிய உண வுகளை ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிறா னென்பதை யும், கடைசியில் அவன் வயிறு வீங்கிக் கனத்து வியா தியுற்று யாதொரு உணவும் உட்கொள்ள முடியாமல் எவ்வாறு வருந்துகிறா. னென்பதையும் பாருங்கள். இதற்குமாறாக, எவன் தனது பசியை ஆளுகின் றானோ, அவன் உணவைத் தேடுவது மில்லை ; ஊணின் பத்தை ஒரு போதும் நினைப்பதுமில்லை ; அவன் மிக மிக எளிய உணவு கிடைப்பினும் சந்தோஷம் அடை கின்றான்', 'யான்' என்னும் கண்ணின் மூலமாகப் பார்க்கும் மனிதர், தமது அவாக்களைப் பூர்த்தி செய் வதனால் உண்டாகுமென்று நினைக்கும் இன்பத்தை அவர் அடைந்த பொழுது அது துன்பத்தின் என் புக்கூடாகக் காணப்படுகின்றது. உண்மையில், எவன் தனது உயிரின் மீது அதிக அபிமானம் கொண்டிருக்கிறானோ, அவனே அதனை விரை . வில் இழப்பான் ; எவன் தனது உயிரின் மீது கொண் டுள்ள அபிமானத்தை விடுகின்றானோ, அவனே அதனை இழவாதிருப்பான். 'யான்' என்னும் பற்றை விடுவதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ, அப்பொழுது மேன்மேல் வளரும் இன்பம் உங்கள் பால் வந்து சேரும். உங்களுக்கு மிக அருமையானதும், நீங்கள் பற்றினாலும் பற்றா விட்டாலும், உங் களிடத்திலிருந்து ஒருநாள் கவரப்படுவதும்