பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். யும் பரிகாரத்தையும் காணும்படிக்கும் செய்யும். நீங்கள் கடவுளை நம்புவீர்களாயின், நீங்கள் நீடூழி வாழ்வீர்கள் ; இந்நம்பிக்கையே உங்கள் இரக்ஷிப் புக்கு வழி ; நித்திய நன்மையா யிருக்கின்ற கடவுளின் மெய்யொளியில் பிரவேசித்தலே இருளினின்று நீங்கு தலும் துன்பத்தினின்று இரக்ஷிக்கப்படுதலுமாம். எவ்விடத்தில் அச்சமும் தொல்லையும் கவலையும் ஐயமும் எரிச்சலும் ஆசாபங்கமும் இருக்கின்றன வோ, அவ்விடத்தில் நம்பிக்கையின்மையும் அஞ்ஞா னமும் இருக்கின்றன. இம்மனோ நிலைமைகளெல்லாம் சுயநயத்தின் நேரான பலன்கள் ; அவை தீமையின் வலிமையிலும் தலைமையிலும் உள் ளூறக் கொண் டுள்ள நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளன ; ஆதலால், அவை அநுபவ நாஸ்திகமாம். ஆன்மா வைக் கெடுக்கும் இம்மனோ நிலைமைகளுக்கு இடம் கொடுத்தலும் ஆளாகுதலுமே மெய்யான நாஸ்திகம். மனித சமூகம் வேண்டுவது இந்நிலைமைகளிலிருந்து இரககிக்கப்படுதலே; இந்நிலைமைகளின் ஆளாகவும் அடிமையாகவும் இருக்கிற எந்த மனிதனும் தான் இரப்பை அடைந்து விட்டதாக வீண்பெருமை பாராட்ட வேண்டாம். அஞ்சுதலும் கவலுதலும் கட வுளை நிந்தித்தலை யொத்த ஒரு பாவமாகும் ; ஒரு வன் நித்திய நியாயத்தில், சர்வவல்லமையுள்ள நன் மையில், அகண்டாகாரமான அன்பில், உள்ளுறுத்திய நம்பிக்கை கொண்டிருப்பானாயின், அவன் அச்சத் தையாவது கவலையையாவது எப்படி அடைதல