பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பின் மௌன வலிமை. பதில் பலமுள்ள நினைப்பையும் கொள்வதற்கு ஒரு வழி. இதனை நீங்கள் செய்து முடிக்கும் வரையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் சம்பந்தித்த காரியங் களிலும் வேலைகளிலும் வெற்றியடையத்தக்க விதத் தில் உங்கள் மனோ சக்திகளைச் செலுத்த முடியாது' இஃது ஒருவனுடைய சிதறுண்ட சக்திகளை ஓர் நல்ல மார்க்கத்தில் செலுத்துவதற்கு உபாயமாகும். சித றுண்ட பல நீரோட்டங்களையும் கேட்டை விளைக்கும் பல நீரோட்டங்களையும் நன்றாக வெட்டியுள்ள ஒரு வாய்க்காலில் செலுத்துவதால், அதன் பக்கத்தி லுள்ள பிரயோஜனமற்ற ஒரு நிலத்தைப் பொன் போன்ற கதிர்களைக் கொடுக்கும் ஒரு நன்செயாக வோ அல்லது நல்ல கனிகளைக் கொடுக்கும் ஒரு தோட்டமாகவோ செய்துவிடலாம்; அது போல, எவன் அமைதியை அடைந்து தனது அகத்திலுள்ள நினைப்போட்டங்களை அடக்கி அவற்றை நல்ல நெறி களில் செலுத்துகிறானோ, அவன் தனது ஆன்மாவை இருப்பதோடு தனது அகத்தையும் வாழ்வை யும் பயன் தருவனவாகச் செய்கிறான், நீங்கள் உங்கள் மனோஎழுச்சிகளையும் நினைப் புக்களையும் ஆளும் திறமையை அடைந்த காலையில், உங்கள் அகத்துள் ஒரு புதிய மௌனசக்தி வளர்வதையும், அமைதியும் பலமுமுள்ள ஒரு நிலை யான உணர்ச்சி உங்களிடத்தில் தங்குவதையும் - நீங்கள் அறியத் தொடங்குவீர்கள். அப்பொழுது,