அரசியல்.
௮௧-ம் அதி.–பொருள்.
விற்கத் தக்க விலையுடை யதுபொருள்.
௮0௧
பொருளின் பறம்புகழ் பொருந்திடச் செய்யும்.
௮0௨
பயனழ கருமையா லுயர்வஃ தடையும்.
௮0௩
விலையிடம் பொழுதால் வேறுபா டுற்றிடும்.
௮0௪
பொருண்மண் முதனாற் பூதங்கள் பிராணிகள்;
௮0௫
அவற்றினின் றாவன வாக்கப் படுவன.
௮0௬
உத்தம மவற்றுண் முத்தாதி மணிகளே;
௮0௭
வயிரமுதல் ரத்நமே பொன்முத லுலோகமே;
௮0௮
நவதா னியமே நன்மரஞ் செடிகளே;
௮0௯
உணவுடை யிலஞ்செல வணியமர்க் குரியவே.
௮௧0
௮௨-ம் அதி.–பொருட் சிறப்பு.
பொருளிற் சிறந்தது புகலவொன் றில்லை.
௮௧௧
அதுநினைத் தவையெலா மளிக்குந் திறத்தது;
௮௧௨
நீர்சூ ழுலகெலா மோர்நொடி யிற்றரும்;
௮௧௩
மன்னர்மன் னவரையுந் தன்னடி வீழ்த்தும்;
௮௧௪
அருளையு மெய்யையு மடைந்திடச் செய்யும்.
௮௧௫
பொருளிலா ரின்பறம் புகழ்மெய் யிழப்பர்;
௮௧௬
மடையராய்த் தம்மரு நடையெலாம் விடுவர்;
௮௧௭
அடியராய்ச் சிறியரா யலக்கணுற் றுழல்வர்;
௮௧௮
பசியினும் பிணியினும் பட்டுழந் தழிவர்;
௮௧௯
பழியுளு நரகுளு மழியா துறைவர்.
௮௨0
43