பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 ஆலயப் பிரவேச உரிமை. மாக மானேஜர் அல்லது டிரஸ்டியின் அதிகாரங்களைப்பற்றி அடி யிற் கண்டவாறு அபிப்பிராயம் வெளியிட்டார்:- "எங்களுக்கு சாதி முறைப்படியுள்ள பொது ஆசாரங்களை அனுஷ்டித்து வரும் பிராமணர்களை மட்டிலுமே கர்ப்பக் கிரகத் துக்குள் கொழவிட முடியும்; கல்யாண சம்பந்தமாக நீர் சாதி ஆசாரத்தை மீறி விட்டீர்; ஆகையினால், சாதி முறைப்படி நடக் கக் கூடிய பிராமணர்களை மட்டும் அனுமதிக்கக் கூடிய பாகத் திற்கு உம்மை விட சட்டமில்லை' யென்று சொல்வதற்கு மட்டுமே கோவில் மானேஜர்களுக்கு அதிகார முண்டு ". இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில் ஒரு 'சாதி'யைச் சேர்ந்த கோவிலென்பதையும், பொதுக் கோவிலல்ல வென்பதை யும் முதலாவதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 'மத சம்பந்தமானதும், ஒரு சாதியைச் சேர்ந்ததுமான கோ விலென்ற முறையில் அதன் தன்மையையும் குண விசேடத் தையும் கவனித்து' என்று மேற்படி வழக்கு சம்பந்தமான (remand) உத்தரவில் கூறியிருப்பதிலிருந்து அது ஒரு பொதுக் கோவிலல்லவென்று வெளிப்படுகின்றது. 6 ஒரு சாதிக்கோ, கிராமத்துக்கோ சொந்தமான கோவிலைப் பொறுத்த வரையிலும் அடை க்கலம்' (trust) என்ற பிரச்னை யே அதிலில்லையென்பது பின்னர் விளக்கப்படும். இத்தகைய ஒரு வகுப்புக்குச் சொந்தமான கோவில் சம்பந்தப்பட்ட மட் டிலும் ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்களுடைய முடிவு ஒப்புக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் ஒரு பொதுக் கோ. விலைப் பொறுத்து வாதப் பிரதிவாதம் எழும்பொழுது, வர் ணாசிரமதர்மிகள் ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்களுடைய மேற்குறித்த தீர்ப்பை யெடுத்துக் காட்டுவார்களானால் நாம் எச் சரிக்கையாக ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். இங்கிலீஷ் சட்டத்தில் 'டிரஸ்டு' என்ற பதம் என்ன பொருளில் உபயோகிக்கப்படுகின்றதோ அந்தப் பொருளை யுணர்த்தும் ' அடைக்கலப் பொருள் பரிபாலன 'மானது இந்து சமூக வாழ்வுக்கே புதிதான தாகும்; இதை யுணராமலே