பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 ஆலயப் பிரவேச உரிமை ஏற்படலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்து மதஸ்தாபனங்களைப் பார்ப்பனீயத்தின் கையில் ஒப்புளிக்கவும், பார்ப்பனர்கள் 'தர்மம்' என்ற பதத்திற்குப் புதிய வியாக்கியானம் கற்பித்தனர். இவை யும், இவைபோன்ற அனுகூலமான சந்தர்ப்பங்கள் பலவும் தா மாக ஒன்று சேர்ந்ததால், இதுவரையிலும் தென்னிந்தியாவில் ஒதுங்கிக்கிடந்த பார்ப்பனீயமானது தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. இத்துடன் அது நிற்கவில்லை. படித்த பார்ப்பனரல் லாத சாதி இந்துக்களும் தங்களை பிராமணர்களாகவே கருதி நடக்க ஆரம்பித்து பார்ப்பனரை விடக் கூடுதலான வர்ணாசிரம தர்மிகளானார்கள். அந்த நிலையில்தான் இப்பொழுதும் கல்விகற்ற சாதி இந்து சமூகம் நிற்கின்றது. தென்னிந்திய ஜன சமூகத்தை ஏற்கனவே வலங்கை, இடங் கை யென்ற பிரிவுகள் பிளவுபடுத்தி யிருந்ததோடு, புதிதாக சாதி மத சம்பந்தமாகவும் பிரிவுகள் ஏற்பட்டபோது, திராவிட மக்களுக்குள் இன்னும் பலவிதமான பிரிவுகள் ஏற்பட்ட துமல்லா மல், அவர்களுள் பெரும்பான்மையான மக்கள் தங்கள் சொந்த தேசத்தில் சாதாரண பிரஜா உரிமைகளையுங்கூட இழக்கவேண்டி வந்தது. இன்றைய தினம், தென்னாட்டில், அவர்கள் பிறந்து வளர்ந்த பூமியில்தானே அடிமைகளாக இருக்கின்றனர். தென் மொழி புறக்கணிக்கப்பட்டது. தென்னாட்டுக் கீர்த்தி குறைந்தது; தமிழனுடைய சரித்திரத்தை எல்லாரும் மறந்துவிட்டார்கள்; தமிழனுடைய விவேகம் நசுக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு வீழ்ச்சியேற்பட்ட இக்காலத்தில், அவர் களுடைய மதஸ்தாபனங்களின் சரித்திரத்தை நாம் இப்பொழுது ஆராய்வோம். இந்து மதஸ்தாபனங்கள் பிராமணர் கைக்கு மாறியபோது என்ன நேர்ந்தது என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தோம். ஆதி யில் தமிழ் மக்களனைவர்க்கும் பொதுவில் உரித்தாயிருந்த இந்த மதஸ்தாபனங்கள் இப்பொழுது அவ்விதமில்லாமல் பார்ப்பனீயம் நிறைத்தனவாயும், ஒரு சுருங்கிய வகுப்பாருக்கு மாத்திரம்உரிமை யுடையனவாகவும் மாறிவிட்டன.