பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் கூகூ யை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை, ஒடுவின் புறம் எனவரும். ஊகார விறுதி யாகார வியற்றே. (8) இஃது,ஊகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- ஊகார இறுதி ஆகார இயற்று-ஊகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் ஆகாரவீற்று அவ்வழியின்கண் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம். கொண்மூக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். உசுரு. வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை யவ்வகை வரையார். இஃது, இவ்வீற்று வினைச்சொல் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (கூஉ) இ-ள் :- வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்-ஊகாரவீற்று வினை யெச்சமாகிய சொல்லிற்கும் முன்னிலைமொழியாகிய வினைச்சொல்லிற்கும், நினையும் காலை அவ்வகை வரையார்-ஆராயுங்காலத்து அவ்வல்லெழுத்து மிக்குமுடியும் கூற் றினை நீக்கார். உ-ம். உண்ணூக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்: கைதூக்கொற்றா; சாத்தா தேவா, பூதா எனவும் வரும். 'நினையுங்காலை' என்றதனான், இவ்வீற்று உயர்திணைப்பெயர் அல்வழிக்கண் வல் லெழுத்து மிக்கு முடிவனகொள்க. ஆடூஉக்குறியன், மகடூஉக்குறியள் எனவரும். (கூகூ) வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, ஊகாரவீறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று-ஊகாரவீறு வேற்றுமைப்பொ ருட்புணர்ச்சிக்கண்ணும் அவ்வாகாரவீற்று அவ்வழியோடு ஒத்த இயல்பிற்றாய் வல்லே ழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். கொண்மூக்குழாம்; செலவு, தோற்றம், பறைவு எனவரும். உ க எ. குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டு முகரக் கிளவி. (P) இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- குற்றெழுத்து இம்பரும் ஓர் எழுத்து மொழிக்கும் உகரக்கிளவி நிற்றல் வேண்டும் - குற்றெழுத்தின்பின் நின்ற ஊகாரவீற்றுமொழிக்கும் ஒரெழுத்தொரு மொழியாகிய ஊகாரவீற்றுமொழிக்கும் உகரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும். உ-ம்- உடூஉக்குறை, தூஉக்குறை; செய்கை, தலை, புறம் எனவரும். 'நிற்றல்' என்றதனால் இவ்வீற்று உயர்திணைப்பெயர் வேற்றுமைக்கண் வல்லெழு த்து மிக்கு முடிவனவென்பது. ஆடூஉக்கை, மகடூஉக்கை; செவி, தலை, புறம் எனவரும். உக அ. பூவெ னொருபெய ராபியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே.