பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ளடு உ-ம். மன்னுக்கடிது எனவும்; மண்ணுக்கடுமை எனவும்; மண்ணுஞான்றது, மண்ணுஞாற்சி எனவும்; மண்ணுவலிது, மண்ணுவலிமை எனவும் இருவழியும் ஒட்டுக. 'எல்லாம்' என்றதனான், தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெறுவன கொள்க. வெண்ணுக்கரை, எண்ணுப்பாறு, மண்ணுச்சோறு எனவரும். (யக) ஙளஅ கிளைப்பெய செல்லாங் கௌத்திரி பிலவே. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- கிளைப் பெயரெல்லாம் கொள் திரிபு இல-ணகரவீற்றுள் ஓர்இனத்தை உணரநின்ற பெயரெல்லாம் திரிபுடையவென்று கருதும்படியாகத் திரிதலுடைய வன்றி இயல்பாய் முடியும். உ-ம்- உமண்குடி; சேரி, தோட்டம், பாடி எனவரும். 'எல்லாம்' என்றதனான், இவ்வீற்றுச் சாரியை பெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவும் கொள்க. மன்ணக்கடி, எண்ணநோலை எனவும்; பாண்கால், கவண்கால் எனவும் வரும். உணர் 'கொள்' என்றதனான், இவ்வீற்று ஏழாம் வேற்றுமைப்பொருண்மை நின்ற இடைச்சொல் திரிந்து முடிவன கொள்க. அங்கட்கொண்டான், இங்கட்கொண் டான், உங்கட்கொண்டான் எனவும்; ஆங்கட்கொண்டான் ஈங்கட்கொண்டான், ஊங்கட்கொண்டான் எனவும்; அவட்கொண்டான், இவட்கொண்டான், உவட்கொண் டான் எனவும் ஒட்டுக. ['மண்ணக்கடி' என்பதில் அக்குச்சாரியையும் 'எண்ணநோலை' என்பதில் அம் முச்சாரியையும் வங் வந்தன.] ஙாகூ வேற்றுமை யல்வழி பெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. (@2) இஃது, அவ்வீற்றுள் ஒன்று அவ்வழியுள் வேற்றுமைமுடிபுபோலத் திரிந்துமுடி வது கூறுதல் நுதலிற்று. இ-ள்:- வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாதவிடத்து, எண் என் உணவுப் பெயர் - எண் என்று சொல்லப்படுகின்ற உணவினையுணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பு நிற்றலும் உரித்து. உ-ம். எட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். உம்மையால், எண்கடிது என்று இயல்பாதலே பெரும்பான்மை. ஙளடு முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும். (an). இஃது, இவ்வீற்றுத் தொழிற்றிப்பருள் ஒன்றற்குத் தொழிற்பெயர்முடிபு விலக்கி இவ்வீற்று அவ்வழி முடிபும் வேற்றுமை முடிபும் கூறுதல் நுதலிற்று. இ-ள்:- முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும்-முரண் என்று கூறப் படும் தொழிற்பெயர் இவ்வீற்றிற்கு இருவழியும் முன்கூறிய இயல்பும் திரிபுமாகிய இயல்பின்கண்ணே நின்று முடியும். உ-ம். முரண்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: முரட்கடுமை, சேனை,தானை பறை எனவும் வரும். 14