பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ருசு தொல்காப்பியம் - இளம்பூரணம். இஃது, உயர்திணைப்பெயர் நான்கு கணத்துக்கண்ணும், இருவழியும் முடியு மாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- உயிர் ஈறாகிய உயர்திணைப்பெயரும்-உயிர் ஈறாகிய உயர்திணைப்பெயர் களும், புள்ளி இறுதி உயர்திணைப்பெயரும்-புள்ளி இறுதியையுடைய உயர்திணைப் பெயர்களும், எல்லா வழியும் இயல்பு என மொழி-நான்குகணத்தினும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா விடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர். உ-ம். நம்பி எனவும் அவன் எனவும் நிறுத்து, அல்வழிக்கண் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும், ஞான்றான்,நீண்டான், மாண்டான் எனவும், யாவன், வலி யன் எனவும், அடைந்தான், ஒளவியத்தான் எனவும், வேற்றுமைக்கண் கை, செவி, தலை, புறம் எனவும், ஞாற்சி, நீட்சி, மாட்சி எனவும், யாப்பு, வலுமை எனவும், அடைபு, ஒளவியம் எனவும் ஒட்டுக. ஒருவென் என நிறுத்து, குறியென்,சிறியென் எனவும்,கை,செவி, எனவும் தன்மைப்பெயர்க்கண்ணும் ஒட்டுக. உயிது புள்ளியிறுதி என்றதனால், உயர்திணைப்பெயருள் இயல்பன்றி மூடின வெல்லாம் கொள்சு. பல்சான்றார், கபிலபரணர், இதையநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர், பல்லாசர் என இவை ஈறுகெட்டு முடிந்தன. கோலிகக்கருவி, வண்ணாரப்பாடி, ஆசீவகப்பள்ளி என இவை ஈறுகெட்டு வல் லெழுத்து மிக்கன. குமரகோட்டம், குமரக்கோட்டம், பிரமகோட்டம், பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்துமுடிந்தன. பிறவும் அன்ன. எல்லாம் என்றதனால், உயர்திணைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன கொள்க. உண்ப சான்றார், உண்டார்சான்றார், உண்பேன்பார்ப்பென் என இவை இயல்பு. உண்டனெம்சான்றேம், உண்டேநாம் என இவை திரிந்தன. பிறவும் அன்,ை ளருரு. அவற்றின் இகரவீற் றுப்பெயர் திரிபிட னுடைத்தே. (கக) இஃகு, உயர்திணைப்பெயருட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் இத விற்று. இ-ள் :-அவற்றுள்-மேற்சொல்லப்பட்ட உயர்திணைப்பெயருள், இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்து-இகரமாகிய இறுதியையுடைய பெயர் திரிந்துமுடி யும் இடமும் உடைத்து. உரையிற்கோடல் என்பதளுன், இது மிக்ககிரியென்பது கொள்ளப்படும். உ-ம். எட்டிப்பூ சட்டிப்புரவு, காமிதிப்பூ காலிகிப்புரவு, அம்பிப்பூ, சம்பிப் பேறு எனவரும். இனுடைத்து என்றதனள், இகா சறன்றிப் பிற ாறும் ஈறு திரியாது இல் லெழுத்து மிக்கு வருவன ஈண்டுக்கொள்க. தினைப்பூ, தினைப்புரவு எனவரும். (கஉ) ளருகா. அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே.