உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Dikshithar Stories.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தி ட் சி தர் கதைகள் சென்னைக்கு வந்து தன்சிநேகிதன் குழந்தையின் யோகட்சேமத்தை விசாரித்ததற்காக அவருக்கு வந்தனமளிக்க, தீட்சிதர் ஆமாம் அம்மா, அதெல்லாம் சரிதான், உங்களுக்கெல்லாம் கொஞ்சம் இவ் விஷயத்தில் கஷ்டம் கொடுக்க வேண்டியவனுயிருக்கிறேன். முதி லியார் அவர்கள், பிறந்த குழந்கை மிகவும் தேக அசெளக்கியமா யிருக்கிறது, பிழைப்பது கஷ்டம் என்று எனக்கு தெரிவித்த ப்ொழுது நான் ஒரு பிரார்த்தனே செய்து கொண்டேன், தெய்வ கடாட்சத்தினுல் அக்குழந்தை கப்பிப் பிழைக்குமாயின் என் குல தெய்வமாகிய திருப் பதி வெங்கடேசப் பெருமாளுக்கு இவர் வீட்டி லிருப்பவர்களுடைய கூந்தல்களையும் முடிகளையும் பிரார்த்தனையா கச் செலுத்துவதாக; வருகிற புட்டாசி மாசம் எப்படியாவது நீங் களெல்லாம் அந்தப் பிரார்த்தனேயை நிறைவேற்ற வேண்டும் என் முர். இதைக்கேட்டவுடன் முதலியாருடைய மாமியாருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது என்ன ஸ்வாமி! இப்படியும் நீங்கள் பிரார்த்தனே செய்து கொள்ளலாமா? நானும் என் மகளு எங்கள் நீண்ட கூந்தல்களைப் பிரார்த்தனேயாகக் கொடுப்பதாவது p அது ஒரு காலும் முடியாது’ என்ற சொன்னுள். அந்த அம்மாளுக்கும் அவர் களுடைய பெண்ணுகிய முதலியார் மனைவிக்கும் கூந்தல் மிகவும் அழகாயும் முழங்கால் வரைக்கும் நீண்டதாயும் இருக்கும்; ஆகவே அதைப் பறிகொடுப்பதென்ருல் அங்க அம்மாளுக்கு மனம் வா வில்லை; அதன் பேரில் எமது திட்சிதக் "ஐயோ! நான் பிரார்த்தனை செய்து விட்டேனே என்ன செய்வது?’ என்று துக்கிப்பவர் போல் பாசாங்கு செய்தார், அதன் பேரில் மாமியார் அம்மாள் அப் படி பிரார்த்தனே செலுத்தவேண்டுமென்றிருந்தால் நீங்கள் உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள் ' என்று சொல்ல, இதுதான் சமயம் என்று பார்த்துக்கொண்டிருந்த தீட்சிகர் "ஆமாம் அம்மா, நீங்கள் சொல்வதும் கியாயம் தானே, அப்படியே இந்த பிரார்த்தனைக்குப் பதிலாக என் முடியை நான் கிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு செலுத்துகிறேன்; அதே மாதிரியாக நீங்கள் எதோ பிரார்த்தனே செய்து கொண்டீர்களாமே பெரியபளே யத்தம்மன் கோயிலைசுற்றி முதலியாரும் அவரது மனேவியும் வேப் பிலே தரித்துக்கொண்டு சுற்றிவருவதாக, அவர்களுக்கு பதிலாக நீங்கள் வேப்பிலே சேலையைக்கட்டிக்கொண்டு இந்த ஞாயிற்றுக் கிழமை மூன்றதாம் சுற்றிவந்து விடுங்கள்’ என்ருர்.இதைக்கேட்ட வுடன் மாமியார் அம்மாளுக்கு அடங்காச்சிரிப்புவா ஏனேயா திட்சிதரே! எனக்காக இந்த கதை யெடுத்தீர்களோ !” என்று சிசித் துக்கொண்டே கேட்டார்கள். நமது தீட்சிதரும் நகைத் துவிட்டு 'இல்லை அம்மா, நீங்கள் யோசித்துப்பாருங்கள் ஒரு விஷபம், காம் ஏதாவது ஒரு பிரார்த்தனே செய்து கொண்ட்ரில் அ,ை நாம் செலுத்துவதா அல்லது மற்றவர்களைச் செலுத்தச் சொல்வதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/52&oldid=726368" இலிருந்து மீள்விக்கப்பட்டது