பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/294

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

குறுந்தொகை பாடல் : 233[தொகு]

233. தலைவன் கூற்று

(தலைவியை மணந்து கொள்ளாமல் வினைமேல் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருகையில் பாகனுக்குத் தலைவியினது ஊரைக் காட்டியது.)

கவலை கெண்டிய வகல்வாய்ச் சிறுகுழி
 கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
 பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன

 காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு
 நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
 வரைகோ ளறியாச் சொன்றி
 நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே.”

என்பது பட்டபின்றை வரையாது சென்று வினைமுற்றி மீளுந் தலைமகன்,தேர்ப்பாகற்குச் சொல்லியது.

   [பட்ட பின்றை- களவு வெளிப்பட்ட பிறகு; ‘‘பட்ட பின்றைவரையாக் கிழவன், நெட்டிடை கழிந்து பொருள் வயிற் பிரிதலும் ...கற்பா லான” (இறை.25.) ]

பேயன்.

   (பி-ம்.) 1. ‘கல்வாய்ச்’; 4. ‘கானெதிர்’ ... யுணர்ந்தோர்க்கு’; 6. ‘வரைகொள்வறியா’, ‘வரைகொள வறியா’.
   (பதவுரை.) பாக, உயர்ந்தோர்க்கு - பெரியவர்களுக்கு,நீரொடு சொரிந்த மிச்சில்- நீரொடு தானம் பண்ணி எஞ்சியபொருளையும், யாவர்க்கும் வரைகோள் அறியா சொன்றி -யாவருக்கும் தடை செய்தலை அறியாத சோற்றையும்உடைய, நிரை கோல் குறுதொடி - வரிசைப்பட்ட திரட்சியைஉடைய குறிய வளைகளை அணிந்த தலைவியினுடைய,தந்தை ஊர்- தந்தைக்குரிய ஊரானது, கவலை கெண்டியஅகல் வாய் சிறு குழி - கவலைக் கிழங்கைக் கல்லியதனால்உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழி, கொன்றைஒள் வீ தாஅய் - கொன்றையினது ஒள்ளிய மலர் பரவப்பெற்று, செல்வர் - செல்வருக்குரிய, பொன் பெய் பேழை-பொன்னையிட்டு வைக்கும் பெட்டியினது, மூய் திறந்தன்ன -மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய,கார் எதிர் - கார்காலத்தை ஏற்றுக் கொண்ட, புறவினது -முல்லை நிலத்தின் கண்ணது.
   (முடிபு) குறுந்தொடியின் தந்தையூர், புறவினது.
   (கருத்து) முல்லை நிலத்தின் இடையே தோன்றும், அதுவே தலைவியின்ஊராகும்.
   (விரிவுரை.) களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவியை வரைந்துகொள்ளாமல் வினைமேல் சென்று வினையை முடித்துக் கொண்டு,வரைந்து கொள்ளும் பொருட்டு மீளும் தலைவன், தலைவியின் ஊரைஉவகை மிகுதியினால் பாகனுக்குக் காட்டிக் கூறியது இது.
   “வெளிப்படை தானே கற்பினொ டொப்பினும் 
    ஞாங்கர்க் கிளர்ந்த மூன்றுபொரு ளாக 
    வரையாது பிரிதல் கிழவோற் கில்லை”              (தொல். களவு. 50)  

என்ற சூத்திரத்தின் உரையில் நச்சினார்க்கினியர்.

   ‘மூன்றுமென முற்றும்மை கொடாது கூறினமையின் ஏனைப்பிரிவுகளின் வரையாது பிரியப் பெறும் என்றவாறாயிற்று; அவைவரைதற்குப் பொருள்வயிற் பிரிதலும் வேந்தற்குற்றுழியும் காவற்குப்பிரிதலு மென மூன்றுமாம்’ என்று எழுதியதனால் இதற்கு விதி பெறலாகும். இதனைக் கற்பினுள்அமைத்துக் கூறுவர் தொல்காப்பியனாரும் இறையனாரகப் பொருளுரையாரும்.
   கவலை - ஒருவகைக் கிழங்கு. கெண்டுதல் - கல்லுதல்; இச் சொல்இக் காலத்தில் கிண்டுதல் என வழங்கும். கெண்டிய - தோண்டி எடுத்த,வெட்டிய; அகநா. 10; நற்.114:2. ஒள்வீ என்றது அப்பொழுது உதிர்ந்தமலர்களை.
    பொன்பெய் பேழை செல்வரேயுடைமையின் ‘செல்வர் பொன்பெய்பேழை’ என்றான். பொன் என்றது இங்கே பொற்காசுகளை. பொற்காசுகள்உருண்டை வடிவினவாக ஒரு காலத்தில் இருந்தன என்பது இந்நூல் 67-ஆம் செய்யுளால் உணரலாகும். கொன்றை மலரை அப்பொற் காசோடுஉவமித்தலை,
   “காசி னன்ன போதீன் கொன்றை”         (குறுந். 148:3)  

என்ற அடியால் அறியலாம். குழிக்குப் பேழையும், கொன்றைக்குப் பொன்னும் உவமைகள். காரெதிர் புறவென்றான், கொன்றை மலருங்காலம் அதுவாதலின. தன் கையால் சுட்டி ‘அதுவே’ எனக் காட்டினான். ஏகாரம் தேற்றம்.

    உயர்ந்தோர் என்பது அந்தணர்களை; அவருக்கே நீரொடு சொரிதல் மரபாதலின். மிச்சில் - எஞ்சிய பொருள். வரைகோள் - வரைதல்; தடை செய்தல்;
   “உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது 
    .... ... .. ... ... ... ... ... .... ... யாவரும் 
    கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி”          (பதிற். 24:18-22.)  

தலைவியின் தந்தை பொன்னும் நெல்லும் மிக உடையவன் என்பதைத் தலைவன் கூறினான்.

   ஊரே: ஏகாரம் அசை நிலை.
   மேற்கோளாட்சி மு. பிரிந்து மீளும் தலைமகன் பாகற்குக் கூறியது(தொல். களவு. 12, ந.)
   ஒப்புமைப் பகுதி1.கவலை கெண்டிய குழி: “கவலையங் குழம்பு”(மதுரைக். 241.)
   கவலைக் கிழங்கைக் கல்லுதல்: “கல்லுவென் மலைமேலுங்கவலையின் முதல்யாவும்” (கம்ப. கங்கைப். 66.)
   1-2. கிழங்ககழ் குழியில் மலர் வீழ்தல்:ஐங். 208:1-3.
   1-3. கொன்றைக்குப் பொன்: குறுந். 21:2-3, ஒப்பு.
   4.காரெதிர் புறவு: “காரெதிர் கானம்” (புறநா. 144:3.)
   2-4. கொன்றை கார்காலத்தில் மலர்தல்: குறுந். 21:3-4, ஒப்பு.
   6.வரைகோள் இல்லாத சோறு: “சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி,வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப, மலரத் திறந்த வாயில் பலருண” (குறிஞ்சிப். 201-3.)
   5-6.செல்வமும் சோறும்: பெருந்திரு நிலைஇய வீங்குசோற்றகன்மனை” (கலி. 83:1.)
   கோற் குறுந்தொடி: “கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே” (குறுந். 267:5, 356:8):குறிஞ்சிப். 167.
   6-7.சோற்று வளமுடைய தந்தை: “தந்தை, அல்குபத மிகுத்தகடியுடை வியனகர்”, “கூழுடைத் தந்தை யிடனுடை வரைப்பின்” (அகநா. 49:13-4, 145:17.)
   மு. குறுந். 235; அகநா. 274. 

மூலம் : குறுந்தொகை பாடல் 233 உரை

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 12:10, 22 பிப்ரவரி 2023 (UTC)