மகாவம்சம்
| மகாவம்சம் மகாநாம தேரர் (பௌத்தப் பிக்கு) |
| மகாவம்சம் என்பது கி.பி 3ம் ஆண்டளவில் இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைபெற்றப் பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில் இருந்த பௌத்தப் பிக்குகளும், ஏனைய விகாரைகளில் இருந்த பௌத்தப் பிக்குகளும் பௌத்தம் சார்ந்து குறித்து வந்தக் குறிப்புகளையும், வாய்மொழி கதைகளையும் செய்யுள் வடிவில் அட்டக்கத்தா எனும் பெயரில் பாடப்பட்டுவந்தன. அவை ஒருகட்டத்தில் காலவரிசையாக ஒருங்கிணைக்கப்பட்டு அட்டகத்தா-மகாவம்சம் எனும் பேரில் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டகத்தா-மகாவம்சம் செய்யுள்களை ஆதாரமாகக் கொண்டு இரண்டு பழம்பெரும் நூல்கள் உருவாகின. கி.பி. 4ம் நூற்றாண்டில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாவம்சமும் அவைகளாகும். இதில் மகாவம்சம் நூலை தொகுத்தவர் மகாநாம தேரர் எனும் பௌத்தப் பிக்குவாவார். இவர் இந்த நூலை பாளி மொழியில் தொகுத்தார். எனவே மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் எனக்கொள்ளப்படுகிறது.
இந்த நூலை வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். அதன் பின்னர் 1912ம் ஆண்டில் மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்தார். இதன் தமிழாக்க வடிவமே இந்த நூலாகும். மகாவம்சம் பௌத்த சிந்தனைகளுடன், பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, தற்கால அறிவியலுடன் ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனைகள், கட்டுக்கதைகள், தொன்மங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ள போதும்; பௌத்தத்தின் வரலாறு, இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைப்பெற்றதன் காலவரிசை, பௌத்ததிற்கு மன்னர்கள் ஆற்றிய பணிகள் போன்றவற்றை முதன்மைப் படுத்தி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்களை உயர்த்தி; இலங்கையில் பௌத்தம் தோன்றுவதற்கு முன்னர் கி.மி. 6ம் நூற்றாண்டு வரையான (நம்பகமற்ற) தகவல்களையும், இலங்கையின் முதல் மன்னனான விஜயன் முதல் கி.பி. 4ம் நூற்றாண்டு ஆட்சி செய்த மகாசேனன் வரையான வரலாற்றையும் கொண்டுள்ளது. இதனால் இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்ய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும், பௌத்தமத வரலாற்றை அறியமுற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் மகாவம்சம் எனும் நூலை மீளாய்வு செய்தல் அவசியமாகின்றது. அதேவேளை இலங்கையின் வரலாற்றை அறியமுற்படும் எவருக்கும் மகாவம்சம் குறித்த போதிய தெளிவு இருத்தலும் அவசியம். மகாவம்சம் இலங்கையின் பௌத்த பிக்குகளால், பௌத்தம் சார்ந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதால், அது இலங்கை பௌத்த சிங்களவருக்கு ஆதரவான நிலையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை தமிழரின் வரலாற்று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். |
இந்த மகாவம்சம் நூல் 37 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துணைதலைப்புகளாக இங்கே இடப்பட்டுள்ளன.
[தொகு] உள்ளடக்கம்
- தாடகாதா பயணம்
- மகாசமதா மரபினர்
- முதலாம் ஒன்றுகூடல்
- இரண்டாம் ஒன்றுகூடல்
- மூன்றாம் ஒன்றுகூடல்
- விசயனின் வருகை
- விசயனின் ஆட்சி
- பாண்டுவாசுதேவனின் ஆட்சி
- அபயனின் ஆட்சி
- பாண்டுகாபயனின் ஆட்சி
- தேவநம்பியதீசனி ஆட்சி
- பௌத்த மதமாற்றங்கள்
- மகிந்தாவின் வருகை
- தலைநகர் வருகை
- மகாவிகாரை ஏற்பு
- செட்டியப்பத்தா விகாரை ஏற்பு
- தாதுசின்னம் வருகை
- வெள்ளரசு கிளை
- வெள்ளரசு மர இடம்
- பௌத்தர் சமாதி
- ஐந்து அரசர்கள்
- துட்டகாமினியின் பிறப்பு
- போர் வீரர்கள்
- சகோதரர்களிடையே போர்
- துட்டகாமினியின் வெற்றி
- மாரிகாவட்டி விகாரை
- உலகபாதசா சடங்கு
- தூபி
- தூபி எழுப்புவதற்கான இடம்
- தாதுசின்ன அறை
- தாதுச்சின்னம்
- தூசித சுவர்க்கவாசல்
- பத்து அரசர்கள்
- பதினொரு அரசர்கள்
- பன்னிரண்டு அரசர்கள்
- பதின்மூன்று அரசர்கள்
- மகாசேனன்