முத்தொள்ளாயிரம்
| ← | முத்தொள்ளாயிரம் | → |
| முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. |
- பாடல் 1
- செங்கால் மடநாராய்!
- தென் உறந்தை சேறியேல்,
- நின் கால்மேல் வைப்பான் என்
- கையிரண்டும் - வன்பால்
- கரை உரிஞ்சி மீன் பிறழும்
- காவிரி நீர் நாடற்(கு),
- உரையாயோ யான் உற்ற
(அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயக!)
- பாடல் 2
- துடியடி, தோல்செவி
- தூங்குகை, நால்வாய்ப்
- பிடியே! யான் நின்னை
- இரப்பால், கடிகமழ்தார்ச்
- சேலேக வண்ணனொடு
- சேரி புகுதலும், எம்
- சாலேகம் சார் நட
(கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.)
- பாடல் 3
- குடத்து விளக்கே போல்
- கொம்பன்னார் காமம்
- புறப்படா; பூந்தார்
- வழுதி புறப்படில்,
- ஆபுகு மாலை
- அணிமலையில் தீயே போல்
- நாடறி கெளவை தரும்.
(பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல்ப் புலங்களிலிருந்து ஊருக்குக்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்)
- பாடல் 4
- அன்னையுங் கோல்கொண்(டு)
- அலைக்கும்; அயலாரும்
- என்னை அழியுஞ்சொல்
- சொல்லுவார்; உள்நிலைய
- தெங்(கு) உண்ட தேரை
- படுவழிப் பட்டேன் யான்.
(அன்னை அடிக்கிறாள். அயலார் சொல்லும் தன்னை வருத்துகிறது, சோழனோடு கூடி அனுபவித்திருந்தால் அதுவும் சொல்லலாம். அந்த அனுபவமும் இல்லாது போனது. தேரைக்கு எட்டாத படி உள்ள தேங்காயின் சத்தை உண்ட தேரைக்கு வந்த பழி மாதிரி எனக்கும் பழி வந்தது.)
- பாடல் 5
- நீரும் நிழலும் போல்
- நீண்ட அருளுடைய
- ஊரிரே ! என்னை
- உயக்கொண்மின் ! போரிற்(கு)
- உழலுங் களியானைப்
- பூழியர்கோக் கோதைக்(கு)
- அழலும்என் நெஞ்சம்
- கிடந்து.
(காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!)
- பாடல் 6
- போரகத்துப் பாயுமா !
- பாயா(து) ஒருபடியா,
- ஊரகத்து மெல்ல
- நடவாயோ ! - பார
- மதவெங் களியானை
- மாறன் தன் மார்பம், -
- கதவங்கொண்(டு) யாமும்
- தொழ
(இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்து சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதை தெளிவாக்குகிறது)
- பாடல் 7
- தெண்ணீர் நறுமலர்த்தார்ச்
- சென்னி இளவளவன்
- மண்ணகம் காவலனே
- என்பரால் - மண்ணகம்
- காவலனே ஆனக்கால்
- காவானே - மாலைக்கண்
- கோவலர்வாய் வைத்த குழல்
(தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய் தொடுத்த அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டு தடுக்க மாட்டானா இந்த மாலை பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை)