உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/விதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

பயனர்:Sridhar G ! தனிநபர் தனிப்பக்கம் தவிரத்தல் சிறப்பு. பொதுவாக அனைத்தும் அடங்கிய விக்கிக்குறியீடுகள் அமைப்பதே சிறப்பு. அதற்குமுன்னே உருவாக்கப்பட்ட நிரல் பக்கம், இணைப்பு அதனுடன் இதுவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தானியக்கப்பணிகளை அனைவருக்கும் நான் செய்ய இருப்பதால், பக்க உள்ளடக்கங்களை மாற்றியுள்ளேன். கடைசி நேரத்தில் சென்றமுறை நாம் பின்தங்கியதால் மிக எளிதற்ற பணிகளில் நான் கவனம் செலுத்துகிறேன். அதனால் நாம் வேகம் பெறுவோம். முன்கூட்டியே நூல்களைத் தாருங்கள் வேண்டியதை நான் செய்ய முன்னேற்பாடு செய்து கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:31, 29 அக்டோபர் 2020 (UTC)Reply

நல்லது Sridhar G (பேச்சு) 06:30, 29 அக்டோபர் 2020 (UTC)Reply

விதிகளின் மூலம் என்ன?[தொகு]

@Sridhar G:இந்த பக்கத்தினை நீங்களே உருவாக்கி உள்ளீர்கள். இங்குள்ள பல விதிகள் தெளிவற்று குழப்புவதாக உள்ளன. இங்குள்ள விதிகள் தனிநபரால் உருவாக்கப்பட்டதா? விக்கியர்களின் கூட்டுக்கருத்தாக்கமா? இதன் மூலம் அறியத்தருக. பொதுவாக பேசுதல், நெடும்பயணத்திற்கு உதவாதென்றே எண்ணுகிறேன். தனிப்பட்ட முறையில் மாணவர்களும், கல்லூரியில் பயிலும் மாணவர்களும், மாணவிகளும், கல்லூரி ஆசிரியர்களும் அடிக்கடி கேட்கும் வினா யாதெனில், மஞ்சள் ஆக்குவதற்கும், பச்சையாக்குவதற்கும் விதிகள் எங்குள்ளன? ஒரு விதி தவறெனில் அதனை எங்கு தெரிவிக்க வேண்டும்? என வினவுகின்றனர். என்ன செய்யலாம்?--தகவலுழவன் (பேச்சு). 00:56, 5 நவம்பர் 2020 (UTC)Reply

@Info-farmer:
  1. //இங்குள்ள பல விதிகள் தெளிவற்று குழப்புவதாக உள்ளன. இங்குள்ள விதிகள் தனிநபரால் உருவாக்கப்பட்டதா? விக்கியர்களின் கூட்டுக்கருத்தாக்கமா? இதன் மூலம் அறியத்தருக// விதிகள் இங்கு உள்ளன. எந்த விதி குழப்பமாக உள்ளது எனத் தெரிவித்தால் அதனை விளக்க முயற்சிக்கிறேன்.
  2. // பொதுவாக பேசுதல், நெடும்பயணத்திற்கு உதவாதென்றே எண்ணுகிறேன். // எதனைக் குறிப்பிடுகிறீர்கள் எனப் புரியவில்லை,.
  3. //மஞ்சள் ஆக்குவதற்கும், பச்சையாக்குவதற்கும் விதிகள் எங்குள்ளன?// இந்தப் போட்டியில் மஞ்சள் ,பச்சை ஆக்குவதற்கான விதிகள் இங்கு உள்ளது.
  4. //ஒரு விதி தவறெனில் அதனை எங்கு தெரிவிக்க வேண்டும்? என வினவுகின்றனர். என்ன செய்யலாம்?// திட்டத்தின் பேச்சுப் பக்கத்தில் எந்த விதி எனக் குறிப்பிடச் சொல்லுங்கள்.

Sridhar G (பேச்சு) 08:32, 5 நவம்பர் 2020 (UTC)Reply

நன்றி, சிறீ! தொடர்ந்து சமூக ஊடகங்களில் நீங்கள் புதியவருக்கு உதவி வருவதைக் கண்டு மகிழ்கிறேன். ஒவ்வொரு நாளும் 4,5நண்பர்களுக்கு அலைப்பேசி வழியே உதவும் போது கலைப்புத் தட்டுகிறது. ஒரே மாதிரியான வினவல்களுக்கு நாம் எப்படி எளிமையாக உதவ முடியும் என்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக, மஞ்சளாக்க பின்வருவன செய்ய வேண்டும். 1 பொதுவான பிழைகளை நீக்கவேண்டும். 2அச்சில் பிழைஇருப்பின் SIC பயன்படுத்த வேண்டும் 3 ஒரு சொல் இரண்டாக பிரிந்து இருந்தால் அவற்றினை இணைக்க வேண்டும். இதனை நிரலால் செய்யவது மிக கடினம் என்கின்றனர். ஒருசொல் பிரிந்து இருவேறு பக்கங்களில் இருந்தால், அதனை அப்படியே விட்டுவிடுங்கள். மேலடி எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், நீங்கள் பங்களிக்கும் நூலின் பொருளடக்கத்தில் எந்த குறியீடும் இல்லாமல் பிழை திருத்தி இருக்க வேண்டும். 3வது விதி மிக முக்கியம். குறியீடு ஒன்றை இட்டு, பிறரிடம் சரிபார்த்து தொடர்ந்து பங்களியுங்கள். அப்படி கேட்காமல் செய்தால் பல பிழைகளை நீங்கள் திருத்த வேண்டிய சூழ்நிலை வந்து மேலும் பங்களிப்பு பணி உங்களுக்கும் பிறருக்கும் கடினமாகி விடும்.--தகவலுழவன் (பேச்சு). 10:52, 5 நவம்பர் 2020 (UTC)Reply