பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இதுதான் திராவிடநாடு

ஏகாதிபத்திய முதலாளித்துவத் தலைவர்களையே நம்பி, அவர்களிடம் கவலையின்றித் தம் உரிமையை ஒப்படைத்தனர்.

குலைக்கிற நாய் கடிக்காது என்ற வெள்ளையரின் அனுபவஅறிவு வீண் போகவில்லை.

இன்று பல்லிழந்த பழைய வெள்ளை ஏகாதிபத்தியமாகிய பிரிட்டனுடனும், புதிதாக அரிசிப்பல் குருத்துவிட்டு வரும் புதிய வெள்ளை ஏகாதிபத்தியமாகிய அமெரிக்காவுடனும் இந்திய உள்நாட்டு ஏகாதிபத்தியம் தன் உரிமை முதலாளிப் பிள்ளைகளாகிய டாட்டா பிர்லாக்கள் மூலமாகவும், டி, டி, கே. நேரு போன்றவர்கள் மூலமாகவும் பேரம் செய்து தென்னகத் தேசீயத்தையும் அது சூழ்ந்து நிலவும் முதிரா ஆசியத் தேசியங்களையும் பிரித்தாண்டும் சுரண்டியும் கீழ்திசையில் அடிமைப் பயிர் வளர்த்து வருகிறது.

வெள்ளை ஏகாதிபத்தியங்கள் எல்லாமே வீழ்ந்துவிட நேர்ந்தால்கூட ஓர் அரை வெள்ளை ஏகாதிபத்தி யத்தையாவது அதற்குள் வளர்த்து விட்டுவிடக் கங்கணங் கட்டிக்கொண்டு உழைக்கிறது, அகில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி! பிரிட்டனின் சண்டிப் பிள்ளையாகிய கிளைவ், அதற்கு ஒரு ஏகாதிபத்தியத்துக்குக் கால்கோள் செய்ததுபோல, அந்நியத் தேசியத்தின் சண்டிப்பிள்ளையாகிய இந்த இன ஏகாதிபத்தியக் கட்சி காங்கிரசும் கனவுகாணாத ஒரு வருங்கால ஏகாதிபத்தியத்துக்குக் கால்கோள் விழாவாற்றும் கனவு கண்டு வருகிறது!

இந்த ஏகாதிபத்தியத் தத்துப்பிள்ளையாகிய தில்லிதான், சுதந்தர தேசீயத்தின் உதயசூரியனாகிய திராவிடத்தைப் பார்த்துக் கேலி செய்கிறது.


தொண்டு செய்யும் அடிமை உனக்குச்
சுதந்திர நினைவோடா ! பண்டு கண்ட துண்டோ ?