உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/காலத்தின் அருமை

விக்கிமூலம் இலிருந்து

காலத்தின் அருமை
 

மனிதனென என்னுடைய இனமாக நீயிந்த
மண்மேற் பிறந்திருந்தும்
மகிழ்ச்சியே இல்லாமல் இகழ்ச்சியாய் எல்லோரும்
மனம் வந்த வாறு பேச
இனிதெனும் புனிதவுண வாடைமனை யாதிபொருள்
எதுவொன்றும் எண்ணாமலே
என்னேரம் பார்த்தாலும் புத்தகமுங் கையுமாய்
இருந்தின்ன செற்றாயெனத்
தனதுமனம் இரங்கியொரு தனவந்தன் பெருஞ்செல்வம்
தந்துசுகி யென்றபோதும்
தலையாய இனியதமிழ் கலைபேணி வளர்க்காமல்
தன்னலங் கருது வோனாய்
எனதுவாழ் நாளிலொரு நாழிகையும் வீணாக
என்றுங் கழிக்க மாட்டேன்
என்பதனை இன்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.