காளிதாசன் உவமைகள்/காதல்

விக்கிமூலம் இலிருந்து

4. காதல்

வெப்பத்தால் வாடிய அரசனையும் ஒளி காலும் மாளவி காவையும் மூத்த இராணி திருமணத்தில் இணைக்கிறாள்.

உள்ளத்தின் நிலைக்களன் உடல்; உடலைவிட்டு உள்ளம் நீங்க இயலாதது. உடலின் வேகத்தைக் காட்டிலும் உள்ளத்தின் வேகம் மிகுதியாயினும் உள்ளம் உடலுடனே இருக்கும். துஷ்யந்தனுடைய உடல் ஒரு திசையில் ஏகுகிறது. அவன் உள்ளமோ அவ் உடலின் வேகத்தோடு காதலி செல்லும் வேகத்தையும் கூட்டி எதிர்த் திசையில் பாய்கிறது.

காதல் தளிர்ந்தது எப்போது? என் கண்களுக்கு அவள் இலக்கானபோது; கண்வழியாக அவளுடைய உருவம் என் மனத்தில் பதிந்தபோது.

காகாதல் அரும்பு தோன்றியது எப்போது? அவள் கை பற்றியது என் மெய் சிலிர்த்தபோது.

இக்காதல் மரத்தின் பழச்சுவையை என்று நான் நுகர்ந்து விடாய் தீர்வேன்? மா. 4:1

னத்தில் உள்ள பெண்ணை அடைந்து இன்புறும் வேட்கைக்குத் தடைகள் பல; அவை வலியன. தடைகளின் வலிமை காதலின் இன்ப வேகத்தை நூறு மடங்கு அதிகப் படுத்துகின்றது.

இப்பெண்கள், உலகில் உள்ள ஆறுகள்; அவற்றின் பிறந்த வீடு, மலைகள்; அவற்றின் காதலன் கடல், ஒவ்வொரு ஆறும், துணை தேடாது, மலையிலிருந்து கடலை நோக்கி விரைகிறது. வழியில், சந்தனக் காடுகளையும் சோலைகளையும் தாண்டி வருகையில் அவற்றால் அணி செய்யப்பட்டு வருகிறது. அலை கள் கடலின் உதடுகள், அவற்றை ஒவ்வோர் ஆற்றுக்கும் தனித்தனியே தந்து, கடல் அதன் முத்தத்தைக் கொள்கிறது. ர:13:9

ங்கை வற்றாத ஜீவநதி, அதன் நீர் எப்போதும் கடலில் பாய்ந்து கொண்டிருக்கும் அந்த நீரின் மனத்தையும் சுவையையும் பருகிக்கொண்டே இருந்தாலும் கடலுக்குத் தெவிட்டுவ உமையும் சிவனும் ஒத்த காமம் கொண்டவராகத் தம் வாய்ச்சுவையும் நாற்றமும் நுகர்ந்தனர். அவர்களுக்குக் காமப் புதுமணவின் தேறல் தெவிட்டவில்லை. கு. 8:16

டல் கொண்ட காதலியை, அவளுடைய காதலன் நெடுந்தொலைவினின்று காண்கிறான்.அவன் அணுகும்போது அவள் நெற்றி களித்து, முகம் கோட்டி, அமைகிறாள். அவள் அரை மனத்துடன் தடுத்தும் அருகில் வந்து அவளுடைய துடிக்கும் உதட்டில் அவன் முத்தம் இடுகிறான்.

விதிசபுரியின் மேல் மேகம் வடக்கு நோக்கிச் செல்கிறது. வேத்ரவதி ஆறு சுழிகளோடிச் சிற்றலைகள் கரையில் மோத, அவ்வூரினிடையே ஒடுகிறது. மேகம் கீழே இறங்கி அவ் ஆற்றில் படிந்து, நீரைப் பருகுகிறது. இயக்கனுடைய தூதைச் சொல்ல வடஇந்தியாவின் கொடிய வெப்பத்தில் மெய்வருந்த நெடுந் தூரம் வந்ததற்குப் பரிசு இது. மே: 1:24

சிவபெருமான் ஆசான்; உமை மாணவி, காமக்கலையே கல்வி. இரகசியத்தில் இருவரும் ஒன்றுகூடி இருந்தபோது ஆசான் மாணவிக்கு அக் கலையைப் பயிற்றினான்.

காமக்கலையை ஏதும் அறியாப் பேதையாகப் பயிலத் தொடங்கிய உமை விரைவில் அக் கலையில் நிபுணியாகி விட்டாள்.

குருதக்ஷிணை?

தன் குருவுக்குச் சமமான வல்லமை பெற்று, அக்கலையால் அவனுக்குத் தன்னையே உரிமையாக்கித் தந்த இன்பமே அவள் குருவுக்குத் தந்த 'தக்ஷிணை'. ( தக்ஷிணை என்ற சமற்கிருதச் சொல் 'ஸாமர்த்யம், வல்லமை, முழு நிறைவு பெறுவித்தல்' எனப்பல பொருள்களை உட்கொண்டது) குரு இதனினும் வேறு என்ன சிறந்த தக்ஷிணையைப் பெறமுடியும்? கு. 8:17

ரிய மேகம் மெதுவாக ஊரில் இறங்குகிறது. உயர்ந்த மாளிகைகளை அணுகுகிறது.முன்றில் தோறும், மாடந்தோறும், நுழைகிறது. வெள்ளி வீழ் (விழுது போல மழைத் துளிகளைச் சொரிகிறது.

காதலியின் கருங் கூந்தல் காதலனுடைய உயர்ந்த தோளிலும், பரந்த மார்பிலும், பரவுகிறது. கூந்தலில் முத்துச்சரங்கள் பின்னப்பட்டுள்ளன. அவற்றினின்று வெண் முத்துகள் சிதறுகின்றன.

மேகம் விரும்பியவாறு மனைகளில் நுழைந்து திரிகிறது.

காதலி, இன்ப மயக்கத்தில் நாணத்தைத் துறந்து, காதலனை விருப்பம் போலத் துய்க்கிறாள். மே. 1.63

மிதிலை நகர் அத்தகைய காதலி, நாற்புறமும் உத்தியான வனங்களை உடையவள். அவற்றில் தளிர்களும் கொடிகளும் பூக்களும் குலுங்குகின்றன.இராமனது கடிமணத்துக்குப் பெரும் சேனையுடன் தசரதன் வந்தான். சேனையில் உள்ள யானைகளும், தேர்களும், குதிரைகளும், வீரர்களும் தம் அளவு கடந்த அன்பால் உத்தியான வனங்களையும் அவற்றில் உள்ள மரம், தளிர், கொடி, மலர்களையும் இறுகத் தழுவினர். அவற்றின் இளமைப் பொலிவு குலைந்தது. ஆனால், மிதிலை நங்கை இவ் ஆலிங்கனத்தை விரும்பி வரவேற்றாள். தன் எழில் நலக்குலைவை அவள் அறியவே இல்லை. ஆலிங்கனத்தால் உண்டான இன்பத்தில் திளைத்திருந்தாள். ர.11:52

புதிதாக மணமான இளம் பெண் அவள். கணவன் அகன்ற மார்பும் உடல்திண்மையும் உடையவன். இன்பச் சூழ்நிலை, இன்சொல், அன்பு, ஆர்வம், நாகரிக நடைமுறைகளால் அவன் அவள் மனத்தையும் உடலையும் கனிவாக்கி, அவளுக்குத் தன்மீது ஆசையை எழுப்பி, அவளைத்தான் அநுபவிப்பது போலவே அவளும் தன்னை அநுபவிக்கச்செய்து, ஒத்த இன்பம் நுகர்வது முறையன்றோ? அன்றேல், இல்வாழ்க்கை வெறுப்பிலும் அருவருப்பிலும் முடியலாம். இதை உணர்ந்தவன் அஜன். சா. 8:17

சகுந்தலை அரசவைக்கு ஆர்வத்துடன் வந்து, தான் துஷ்யந்தனுடைய மனைவி என்று அறிவித்தும், துஷ்யந்தன் அவளை ஏற்க மறுக்கிறான். அவள் கருவுற்றுள்ளதை அறிந்தும், அவள்மீது இரக்கம் கொள்ளவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின் உண்மையை அறிந்த அரசன் தன் கொடுஞ் செயலுக்குக் கழி விரக்கம் கொண்டு, சகுந்தலையின் ஒவியத்தை வரைந்து, அதைக் கண்டு பிதற்றுகிறான், ஆற்றை அணுகியும் விடாய் தீர்க்காமல் கானல் நீரைத் தேடும் பித்தனே போல்வான் அவன். சா.6:16

"https://ta.wikisource.org/w/index.php?title=காளிதாசன்_உவமைகள்/காதல்&oldid=1533823" இலிருந்து மீள்விக்கப்பட்டது