குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாழ்க்கைக் குறிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக் குறிப்புகள்

ஆண்டு நிகழ்வுகள்
1925 தோற்றம்
பூர்வாசிரமம் : தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை
 தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன்
தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம், திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931- சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
1936 ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937- தமையனார் திரு. கோபாலகிருஷ்ன பிள்ளை வீட்டில்
1942 கடியாபட்டியில் வாழ்தல்.
பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு.
‘வினோபா பாவே’ படிப்பகம் தொடங்கி நடத்துதல்.
1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல்.
1947- * சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர்
1948 திருமடம் தூய்மைப் பணி; திருமுறை வகுப்பு, விழா நடத்துதல்.
1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
1952 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளல்.
அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம்.
'மணிமொழி' என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல்.
1953 ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல்.
பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம்.
1954 இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு.
திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு.
தாய்லாந்து, இந்தோசீனர், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
'தமிழ்நாடு' நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
அறிஞர் அண்ணர் குன்றக்குடி திருமடத்திற்கு வருகை.
ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை.
1958 குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்; பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல்.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்கு தொடர்தல்.
1966 தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம்.
1967 திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம்.
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - 'திருக்குறள் உரைக்கோவை' நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல் - திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல்.
இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல்.
கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல்.
1969 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு;
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்
தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல்.
சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல்.
சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம்.
1972 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல்.
சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம், வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல்.
1973 திருக்குறள் பேரவைத் தோற்றம்.
திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல்.
"கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்" என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது.
குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது.
1975 நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு.
அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி.
1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல்.
மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம்.
புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி.
1984 பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல்.
1985 நடுவணரசு திட்ட ஆனைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்.
மணிவிழா
1986 தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெறுதல்
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் "Kundrakudi Pattern" என்று அறிவித்தது.
இவர் எழுதிய 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.
அரபு நாடுகள் பயணம்.
1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 இறைநிலை யடைதல்.