பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 163


உள்ளுறை:அயர்ந்துறங்கும் காட்டுப்பன்றியினை முல்லை மூடிக்கிடப்பதுபோலக் குமுறும் அவள் நெஞ்சகத்தை அவள் ஒளிதுதல் திரையிட்டுக் காட்டும்; நெற்பயன் கொள்வோர் மலர்களையும் துன்புறுத்துவது போலப், போர்த்தொழில் மேற்கொண்ட அரசனும், அவ்வீரர் தம் மனைவியரையும் பிரிவுத்துயரால் நலிவுறுமாறு வருத்துகின்றனன் என்க.

85. ஆழல் வாழி தோழி!

பாடியவர்: காட்டுர்க்கிழார் மகனார் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிய வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: வென்வேல் திரையன்.

(தலைமகன் வினைமேற் பிரிந்தனனாக, அவனையே எண்ணி எண்ணி வருந்தினாள் தலைமகள். அவளுடைய நலிவினைப் போர்க்குமுகத்தால், மழைக் காலம் வந்ததெனக் காட்டித் தோழி, 'அவன் வருவான்’ என்று வற்புறுத்துகின்றாள்.)

'நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
இன்னம் ஆகவும், இங்குநத் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்'எனப் பலபுரிந்து,

ஆழல்-வாழி, தோழி:- சாரல்,
5


ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;

நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை
10


நறுவி ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து,
துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்,
வருதும், யாம்'எனத் தேற்றிய

பருவம் காண்அது; பாயின்றால் மழையே.
15

தோழி! நீ வாழ்வாயாக!

"எனது நறிய நுதலிலே பசலை படரவும், என்னுடைய பெரிய தோள்கள் மெலிவடையவும், உணவும் வெறுத்தமையால் ஏற்பட்ட துயரத்தோடு, உயிரும் உடலைவிட்டுப் போய்விடுமோ என்னுமளவுக்கு யான் மிகமிக மெலிந்துள்ளேன். நான் இந்நிலை யினள் ஆகவும், இவ்விடத்தே நம்மை வாடவிட்டுப் பிரிந்து போன நம் தலைவர், இல்லற நெறியினைப் பேணுபவரே