உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★193



சொற்பொருள்: தொல்கவின் - தொன்மையான அழகு எழு - கணைய மரம். திணிதோள் - திண்மையான தோள்கள். 5. நேரா எழுவர் - பகைத்து வந்த எழுவர்; இவர் விவரம் அகம் 36 ஆவது பாடலுள் காண்க. 6. ஆலங்கானம் - தலையாலங்கானம், 8. மா அல் யானை - பெரிய யானையுமாம். 9. உம்பர் - அப்பால், 10. அறை - குன்று. நிறை - நிறைந்துள்ள தன்மை. 1. செவ்வேல் - பகைவரைக் கொன்று குருதிக் கறை படிந்துள்ள வேல். 16. கடவுளாகிய கடவுட் கோலம் செய்த எனவும் ஆம்.

மேற்கோள்: இயற்பட மொழிந்து வற்புறுத்தற்கு இச்செய்யுளை, என்பு நெகப் பிரிந்தோர் வழிச்சென்று கடைஇ, அன்பு தலையெடுத்த வன்புறைக் கண்ணும் என்னும் பகுதிக் கண், நாற்றமும் தோற்றமும் என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதம்: 14. சேரலற் கீத்த,

210. பல கேட்டணம் தோழி!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: தோழி, தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

(உறவாடிக் கைவிட்ட தலைவன், நெடுநாட்களுக்குப் பின்னர் ஒருபுறமாக வந்திருக்க, அவன் செயலால் தாம் சாவது தவிர வேறு வழியில்லை எனக்கூறி, அவனை வரைந்து கொள்ளச் செய்ய முயலும் தோழி, இப்படிக் கூறுகின்றாள்.)

குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லின் போகி, பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரனழிந்து, 5

நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,
தானிவண் வந்த காலை, நம்ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி,
ஆனாது புகழ்ந்திசி னோனே; இனித்தன், 10

சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,
கைதைஅம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்
செலவுஅரிது என்னும் என்பது
பலகேட் டனமால்-தோழி!-நாமே