பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

அகநானூறு - மணிமிடை பவளம்


10. தொடை - தொடுத்தலையுடைய 1. விளரி - இசைப்பகுப்புள் ஒன்று. நயவரு விருப்பந்தரும்.13. எடுப்பும் எழுப்பும்.14. மதுகை - வலிமை.16. கையறு நெஞ்சம் - செயலற்ற நெஞ்சம். அடைதரும் அணைத்துக் கொள்ளும்.

விளக்கம்: ‘நண்புடையாளர்கள் இல்லாத ஒரு நிலைமையையும், உறவினர்கள் துன்புறுத்தலையும், தன்னுடன் ஒட்டாது வாழ்பவரே பெருமளவினராயிருக்கும் நிலைமையையும் கண்ட பின்னரும், ஒரு பகுதியிலே, அவருடன் தங்கி வாழ்ந்திருத்தல் பொறுககக்கூடிய தாகுமோ? எனவும், முதல் மூன்றடிகளின் பொருள் கொள்ளப்படுவதும் பொருந்தும்.

‘பிற பெண்கள் எழுந்து முற்றத்தே புனல் தெளிக்கும் பொழுதிலும், இளவேனிலின் தன்மையாற் செயலற்று, என்னை வந்து தழுவிக் கொள்பவள்!’ என, அவள் தன்பாற் கொண்ட ஆராத பெருங்காதலை உரைத்தனன். புனல் தெளிகாலை - இள வேனிற் காலம் எனவே கொள்வாரும் கொள்க.

பாடபேதம்: 12 நறைமலி பொங்கர்.

280. தந்தை வருவானோ!

பாடியவர்: அம் மூவனார். திணை: நெய்தல் துறை: 1. தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 2. அல்ல.குறிப்பட்டுப் போகா நின்றவன் சொல்லியது உமாம்.

(1. தலைமகளை இரவுக்குறியிலே கூடி மகிழ்ந்து, தன் ஊர் நோக்கிச் செல்லுகின்றான் ஒரு காதலன். அவளுடைய சிறந்த நலன்கள் ஒவ்வொன்றும் அவனுடைய உள்ளத்திலே நீங்காது நிலைபெற்று இருக்கின்றன. அவன், அந்தக் களிப்பினாலே தன் நெஞ்சிற்கு இப்படிச் சொல்லுகின்றான். 2. சந்திக்கச் சென்றவன், அவளைச் சந்திக்க முடியாமற்போனதால், அவள் நலனை நினைந்து இப்படிச் சொல்லுகின்றான்.)

        பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
        பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்.
        திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
        அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
        நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும், 5

        பெறல்அருங் குரையள்ஆயின், அறம்தெரிந்து,
         நாம்உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து, அவனொடு
        இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,