பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 163


வந்தனர். தலைவியின் தோழி, அவர்களை விரைந்து மண வாழ்விலே பிணைத்தலை விரும்புகின்றாள். தலைமகன் வந்து ஒருபுறம் இருப்பதனை அறிந்த அவள், தலைவியிடத்தே சொல்லுமாறு போல இவற்றைக் கூறித், தலைவனுக்குக் தம்முடைய இக்கட்டான நிலையினையும், விரைவிலே தலைவியை அவன் முறையோடு மணந்துகொள்ள வேண்டியதன் இன்றியமையாமையினையும் அறிவுறுத்துகின்றாள். இந்த அமைதியுடன் எழுந்தது இச் செய்யுள்.)

"வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகலிலைப் புன்னைப் புகார்இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே

காயல் வேய்ந்த தேயா நல்லில்
5


நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அருங்கடிப் படுவலும் என்றி; மற்று 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய் 'செலினே
வாழலென்' என்றி ஆயின் ஞாழல்

வண்டுபடத் தழைத்த கண்ணி நெய்தல்
1O


தண்ணரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறிகொள் பாவையிற் பொலிந்தஎன் அணிதுறந்து

ஆடுமகள் போலப் பெயர்தல்
15

ஆற்றேன் தெய்ய அலர்கவில் ஆரே!.

தோழி! வளைவான கோதையினை உடைய இள மகளிர்கள், வண்டல் விளையாட்டினை ஆடியபின், வீடு திரும்புதற்கான பகற்போது ஒளிமழுங்கிய மாலைப்போதும் வந்துள்ளது.

அகன்ற இலைகளையுடைய புன்னைமரத்தின், புள்ளியற்ற நீழலினிடத்தே, பகல்வேளையில் எம்முடன் விளையாடிவிட்டு, இரவுப் போதில், காய்ந்த புல்லினாலே வேய்ந்துள்ள வளமை குறையாத நல்ல நம் வீட்டின்கண், இவனைப் பிரிந்த காம நோயுடன் தோன்றினையாயின், நின் தந்தையின் அரிய காவலுக்கு உட்படுத்துவதாகவும் சொல்லுகின்றாய்.

அன்றியும், 'நீ போகாதே’ என்று அவன்பாற் சொல்லு தற்கும் ஆற்றாதவளாக உள்ளனை. அவன் சென்றாலோ, "உயிர் வாழ்ந்திரேன்" என்கின்றனை அங்ஙனமாயின்