பக்கம்:அஞ்சலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 லா ச ராமாமிருதம்

“தங்கள் பதில் தந்தி கிடைத்தது. தங்கள் தீர்மானத்தின் விவேகத்தை நான் பாராட்டுகிறேன். ஆம், தற்சமயம் தாங்கள் இங்கு வருவதில் பயன் ஒன்றுமில்லை. ஸ்ரீ பானுமூர்த்தியின் அஸ்திகூடச் சரியாய்க் கிடைக்கவில்லை. அவரைச் சுற்றி மாத்திரம் தனி உக்கிரத்துடன் வலைமாதிரி நெருப்பு சூழ்ந்துவிட்டது.

ஸ்ரீ பானுமூர்த்தியின் மரணத்தை விஸ்தரிக்க இஷ்டமில்லாவிடினும் அவசியமான சில விவரங்களை மாத்திரம் கொடுக்கக் கடமைப் பட்டவனாயிருக்கிறேன்.

மாலை வேளையில் அவர் தன் சஹாககளுடன், காலேஜுக்குத் திரும்பி லந்துகொண்டிருக்கையில் திடீரென்று எல்லோரும் ஒரு வீட்டு மாடி ஜன்னலிலிருந்து ஒரு பெரும் ஜ்வாலை கொடிமாதிரி வேகமாய் ஆடுவதைக் கண்டனர். காற்றுவாக்கில், கண்ணிமைக்கு முன், வீடு முழுதும் எரிய ஆரம்பித்துவிட்டது. பானுமூர்த்தி வீட்டுக்குள் ஓடினார். கீழ்க்கட்டுக் குடித்தனங்கள் வெளியே ஒடி வந்துவிட்டன. மாடியில் ஒரு குடித்தனம் தம்பதிகளும் நான்கு குழந்தைகளும் கதவைத் திறக்க முடியாமல் உள்ளே தவிக்கின்றனர். நெருப்பின் கர்ஜ்ஜனையுடன் அவர்களின் கூக்குரல்களும் கேட்கின்றன. பானு, தைரியமாய், எல்லோரும் தடுக்க, உதறிவிட்டு, புகைக்கும் நெருப்புக்குமிடையே படியேறி கதவை மோதியுடைத்து உள்ளே ஓடினார். உள்ளிருந்த பெரியவர்களிருவரையும், குழந்தைகளையும் அவர்தான் வெளிப்படுத்தினார். குழந்தைகளை ஒவ்வொன்றாய்த் தூக்கிக் கீழே எறிய, கீழிருப்பவர் தாங்கிக்கொண்டனர். அதற்குள் அந்த அம்மா “ஐயோ கைக்குழந்தை” என்று அலறினாள். உள்ளே தொட்டிலைத் தேடிக்கொண்டு மறுபடியும் ஓடினார், அவ்வளவுதான். உள்ளே இனி யாரும் வராதே எனத் தடுக்கிறமாதிரி மேலிருந்து இரு பெருந் தூலங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/104&oldid=1024555" இலிருந்து மீள்விக்கப்பட்டது