பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

81


மனிதனுடைய உள்ளத்துக்கு உயர்ந்த அணி எது? பிறர் மனைவியரை விரும்பாத பெருந்தகைமையே. உத்தமன், பரிசுத்தன் என்னும் அற்புதப் பேர்கள் கற்புடையவனுக்கே உரிமையாய் வருகின்றன. இந்தப் புனித ஒழுக்கம் அதிசய இன்பங்களையும், அரிய மேன்மைகளையும் ஒருங்கே அருளுகின்றன.

அரிய பேறுகள் அனைத்தையும் எளிதினில் அடைந்து
பெரிய மேன்மைகள் பெறஒரு வழியுளது: அதுதான்
உரிய தன்மனை அன்றிமற் றுள்ளவர் எல்லாம்
பிரிய மேவிய தாய்தங்கை என்றுபே ணுதலே. (1)

பெற்ற தாய்எனப் பிறர்மனை எண்ணுவோன், பிறர்கை
உற்ற ஒண்பொருள் ஓடென உணருவோன், உலகில்
மற்றை யாவையும் தன்னுயி ராம்என மதிப்போன்
கற்றவன் அவன் கருதரும் பேரின்பம் கண்டான். (2)

(வீரபாண்டியம்)

அரிய பேரின்ப நிலையை எளிதே அருளுகிற பெரிய அமுத சீலம் ஈண்டு அறிய வந்தது.

உயிர்க்கு உண்மையான அணி உத்தம ஒழுக்கமே; இதனை உய்த்து உணர்ந்து உரிமையுடன் தோய்ந்து மாந்தர் உய்ய வேண்டும்.


26.

பொய்கைக் கணிநீர்ப் பொலிவே; புயலியைந்த
பெய்கைக் கணிவிளைவு பேணுகையே;-செய்தமைந்த
உண்டிக் கணிவிருந்தோ டுண்ணலே; உண்ணுமுன்
பண்டிக் கணிபசியே பார். (௨௬)

இ-ள்.
இனிய நீர்ப்பெருக்கின் பொலிவு பொய்கைக்கு

11