பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்க ஓரிடத்தான்கள்

141


92 அடிப்படைப் பொருள்களையும் நீரியம், கார்பன்5, உயிரியம் போன்றவற்றை இலேசான பொருள்கள் என்றும், வெள்ளி, இரும்பு, துத்தநாகம் போன்றவற்றைக் கனமான பொருள்கள் என்றும், பொன், யுரேனியம், ஈயம் போன்றவற்றை மிகக் கனமான பொருள்கள் என்றும் வகைப்படுத்தினான்.

நீண்ட காலமாகவே, மனிதன் இந்த 92 அடிப்படைப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாகவே இருந்தன என்று நினைத்தான். எனவே, இவ்வுலகிலுள்ள நீரியம் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்றும், இவ்வுலகெங்கும் கிடைக்கும் யுரேனியம் முழுதும் ஒரே தன்மையுடையது என்றும் நினைத்திருந்தான். இவ்வாறு அவன் கருதினமைக்கு நல்லதொரு காரணமும் இருந்தது. அஃதென்னவெனில், எல்லா நீரியமும் ஒரேமாதிரிதான் காணப்பட்டது; ஒரே மாதிரியாகவே செயலும் புரிந்தது. யுரேனியமும் அவ்வாறே தென்பட்டது. உண்மையில், 32 தனிமங்களிடமும் இந்த உண்மையைத்தான் அவன் கண்டான்,

ஆனால், இன்றைய நிலை வேறு. ஒன்று சேர்ந்து தனிமங்களாகும் அணுக்களிலும் வேற்றுமைகள் உள்ளன என்பதை மனிதன் உணரத் தொடங்கியிருக்கிறான். எனவே, எல்லா நீரியமும் திட்டமாக ஒரே மாதிரியாக இல்லை; அவ்வாறே பொன், வெள்ளி, உயிரியம், யுரேனியம் ஆகியவையும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இந்த வேற்றுமைகள் எடையைப் பாதிக்கச் செய்கின்றன. சிலவகைத் தனிமங்கள் பிறவற்றைவிட எடையில் இலேசாகவோ கனமாகவோ இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவை கதிரியக்க விளைவு தரக்கூடியனவாக உள்ளன. சிலவகைகளின் ஒரு தனிமம் புதிர்க் கதிர்கள் போன்ற காணாக் கதிர்களை7விளைவிக்கின்றன; பிற அவ்வாறு செய்வதில்லை. இத்தகைய கதிர்களை அல்லது 'அணுப் பொரிகளை'8 வெளிவிடும்


5கார்பன்-carbon. 6கதிரியக்க விளைவு-radioactivity. 7காணாக் கதிர்கள்-invisible rays, 8 "அணுப்பொரிகள்” - “atomic sparks”.