பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அணுவின் ஆக்கம்

தல் மண்ணைச் சராசரி 6 அடி உயரம் கிளப்பினுல், செய்யப் பட்ட வினை 2000 x 6 = 12000 இராத்தலடிகள். ஒரு பளுவை மேலே தூக்கியோ அல்லது ஒரு சுருள் வில்லை இறுக்கியோ வினே செய்யப்பெற்ருல் அதற்காகக் கடந்த காலம் ஒரு வினுடியாயினும் ஒரு மணியாயினும் வினேயின் அளவு ஒன்றேயாகும். கால அளவு வினை செய்யப்பெற்ற வீதத்தைக் காட்டுமே யொழிய வினேயின் மொத்த அளவில் வேற்றுமையுண்டாக்காது. ஒரு டன் எடையை மேல் விட் டிற்கு ஒரு விகுடியில் தூக்கிவிடக் கூடிய துக்கு பொறிக் கும் அதையே ஒரு நிமிடத்தில் தூக்கக்கூடிய மற்ருெரு இயந்திரத்திற்கும் உள்ள வேற்றுமையை நாம் உணர்கிருே மன்ருே? இரண்டு பொறிகளும் செய்யும் வேலை ஒன்றேயா யினும் செய்யும் வீதத்தில் (அஃதாவது விசையில்") வேறு படுகின்றது. இங்கிலாந்து நாட்டில் தொழிற் புரட்சியின் தொடக்கத்தில் ஆற்றல் மிக்க பல புதிய பொறிகள் கண்டு பிடிக்கப்பெற்றன. ஜேம்ஸ் வாட் என்ற அக்காலத்தி லிருந்த பெளதிக அறிஞர் தாம் கண்டறிந்த நீராவிப் பொறி யின் திறனை யாவர்க்கும் விளங்கும் வகையில் கூற விரும்பி ஞர். அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது. நமது நாட்டில் மாடுகளைப் பல வேலைக்கும் பயன்படுத்துவதைப் போல இங்கிலாந்தில் குதிரைகளே மக்கள் பயன்படுத்துவது வழக் கம். ஆகவே, பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பொறியின் திறனே இத்தனைக் குதிரைத் திறன் கன்று அவர் கூறினர். திறமை வாய்ந்த குதிரைகள் வேல் செய்யும் திறனின் சராசரியை அளவிட்டு, அவர் இவ் வலகை வகுத் தார். 550 இராத்தல் எடையுள்ள பொருளே ஒரு விடிை நேரத்தில் ஓர் அடி உயரம் தூக்கக்கூடிய திறனே குதிரைத் திறனுகும். இது 746 வாட்டுக்குச் சமம். ஆகவே, ஒரு கிலோ வாட் என்பது சுமார் 1; குதிரைத் திறனுகும். ஒர் எடுத்துக் காட்டால் குதிரைத் திறன் என்ன என்பது விளக்கம் எய்தும். ஒரு மனிதரின் எடை நூற்றுப்பத்து இராத்தல் என்று கொள்வோம். அவர் தம் எடையைத் தூக்கிக்

தூக்குபொறி - crane. ° so -power. GzRisse - James watt. * SSsoré Sosör - horse-power.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/58&oldid=599335" இலிருந்து மீள்விக்கப்பட்டது