பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல்

49


வேதியல் கிரியையால் ஏற்பட்ட விளைவு. தாவரப் பொருள் களில் தீக்குச்சியைக் கிழித்து வைத்தால் அவை யாவும் எரிந்து விடுகின்றன. அவை கொழுந்துவிட்டு சுவாலை யுடன் எரிகின்றன. சுவாலையினின்று வரும் சூடு சேமித்து வைக்கப் பெற்றுள்ள வேதியல் ஆற்றலிலிருந்து எழுகின்றது. இந்த வேதியல் ஆற்றல் கதிரவனிடமிருந்து பெற்றதாகும். எரிதலில்56 வெளிப்பட்ட சூடு எரிந்த பொருள்களே உண் டாக்குவதற்குத் தாவரங்கள் கதிரவனிடமிருந்து பெற்ற ஒளி யாற்றலுக்குச் சமமாகும் என்பதை கவனத்துடன் செய்யப் பெற்ற சோதனைகளால் தெரிய வருகின்றது. எனவே, எரி யைகள் மனிதனின் உடன் பயனுக்காக அமைந்த வேதியல் ஆற்றலின் சேமிப்பிடங்களாகும்.

ஒரு காலத்தில் கட்டை56 உலகெங்கும் எரியையாக இருந்தது. இன்றும் உலகில் சில பகுதிகளில் கட்டை யையே எரியையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆளுல், நவீன தொழிற்சாலைகளில் நிலக்கரிதான் பயன்படுத்தப் பெறுகின்றது. நிலக்கரி என்பது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னர் சதுப்பு நிலங்களில் ஆழ்ந்து புதை யுண்டு உருமாறிய கட்டையே. பன்னெடுங் காலத்திற்கு முன்னர் நிலத்தினடியில் புதையுண்ட கட்டையே பாறை யாக மாறிய மண், மணல் அடுக்குகளின் அதிக அமுக்கத் திற்கும் சூட்டிற்கும் உட்பட்டு சிதைவடைந்து இறுகி நிலக் கரியாக மாறியது. எனவே, நிலக்கரி என்பது பண்டைக் கதிரவன் ஒளி சேமித்து வைத்த வேதியல் ஆற்றலாகும். கட்டையைவிட அது அதிகம் விலையுயர்ந்த எரியையாகப் பயன்படுகிறது. காரணம், அது இறுகி அடர்வுடன் உள்ளது ; அதில் சிறிதும் நீரோ, காற்ருே இல்லை. ஒவ்வொரு இராத்தல் எடையிலும் அது கட்டையைவிட அதிக ஆற்ற இலக் கொண்டுள்ளது. இதுபோலவே, பெட்ரோலியம் என்ற எண்ணெய்ப் பொருளும் மிக முக்கியமானது. பெட்ரோலியம் என்பது பலகோடி யாண்டுகட்கு முன்னர் கடல்வாழ் சிறு உயிர்களும் தாவரங்களும் பண்டைக் கடலினடியில் நசித்-


56எரிதல், தகனம்-combustion. 56 கட்டை-wood 53-5