பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அண்ணாவின் ஆறு கதைகள்


திற்கென்ன? ரூபத்திற்குத்தான் என்ன? எலுமிச்சம் பழம் போல இருக்கிறது குழந்தை” என்றாள் பாமாவின் தாய்.

பாமா புன்சிரிப்புடன், “அப்புறம், இன்னம் கொஞ்சம் வர்ணியுங்கள், கமலாவைப்பற்றி, அவள் கண்டது இது தானே” என்றாள்.

“போடி போக்கிரி சிறுக்கி, கமலா எவ்வளவு ஆசார அனுஷ்டானந் தவறாது இருக்கிறாள் பார்! ஒரு நாளாவது சிவன் கோவிலைப் போய் பூஜை செய்யாது இருக்கிறாளா? நீ தான் அந்த சங்கத்திற்குப் போகிறேன், இந்த சேரிக்குப் போகிறேன் என்று குலத்தையே கெடுத்துக்கொண்டு வருகிறாய்” என்றாள்.

“கமலா, என் தோழி! அவள் விஷயத்தில் உங்களுக்கு இருப்பதைவிட எனக்கு அக்கரை அதிகம். நாளை மாலை மூன்று மணிக்கு நான் உங்களுக்கு ஒரு “காட்சி” காட்டப் போகிறேன். சாஸ்திரிவாள், நீர் இரவு முழுவதும் குத்து விளக்கடியில் உட்கார்ந்துகொண்டு உமது பஞ்சாங்கக் கட்டையெல்லாம் புரட்டிப்புரட்டிப் பார்த்தாலும், நாளை என்ன காட்டப்போகிறேன் என்பதைக் கண்டுகொள்ள முடியாது. கமலா, அழகி! கமலா ஒரு யுவதி! கமலா ஒரு விதவை! அவள் என் அருமைத் தோழி! அவளை நீங்கள் முற்றும் தெரிந்துகொள்ளவில்லை, நான் தெரிந்துகொண்டேன். இன்று போய் நாளை வாரும். உமது மனம் முதலில் மருண்டு பிறகு குளிரும் காட்சியைக் காண்பீர்” என்று பாமா கூறிவிட்டு, பெண்கள் முன்னேற்ற சங்கத்திற்குப் போய்விட்டாள்.

“இதோ பாருங்கள்! ‘கப்சிப்’ என்று இந்த அறையில் இருக்கவேண்டும். நான் அறையை வெளிப்பக்கம் பூட்டி விடப்போகிறேன்” என்று கூறி பாமா, சாஸ்திரிகளை ஒரு அறையில் பூட்டிவிட்டாள். மறுநாள் மாலை சாஸ்திரிகளுக்குக் கொஞ்சம் பயம், இந்தப் ‘போக்கிரிப்பெண், என்ன சூது செய்வாளோ என்று. சிறிது நேரத்திற்குப் பிறகு சிரிக்-