பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரார்த்தனை

49


பனிடம் கொஞ்சம் பயப்படவும் ஆரம்பித்தார்கள். தாயம்மாள் ஏழைக்குடி. ஆனால், அவளுடைய எழில் மலையப்பனை அந்தக் குடிசைக்கு வரவழைத்தது. மலையப்பனின் பெற்றோர்கள், ‘பையன் கெட்டுக் கீரை வழியாவதற்குள் ஒரு முடி போட்டுவிட வேண்டும்’ என்று முடிவு செய்தனர். அதற்குள் குடிசையிலே மலையப்பன் தாயம்மாளைச் சரிப்படுத்திவிட்டான். அதிகக் கஷ்டங்கூட இல்லை. அவன் தொட்டான். அந்தத் தளிர் சாய்ந்தது. “உன்னைத் தான் கலியாணம் செய்து கொள்ளப்போகிறேன். எங்கப்பா மீது ஆணை” என்று மலையப்பன் கூறினான். அந்தக் குமாரி ஆனந்தமடைந்தாள். அடிவயிற்றிலே அந்த ஆனந்தத்தின் சாட்சி, மெதுவாகத் தழைத் தொடங்கிற்று. அந்தச் செய்தி தெரிந்ததும் மலையப்பன் ஊரைவிட்டே நழுவினான், தாயம்மாளின் தகப்பன் துக்கத்தையும், கோபத்தையும் ‘கண்ணீரால் கழுவினான். பயல் மகா பேர்வழி! அவனை எப்படியோ அந்தத் தாய் மயக்கி மடக்கிப் போடப் பார்த்தாள். சிறுபயல் தானே, அவள் கண்ணைக் காட்டினாள்; சொக்கிவிட்டான். எதுவோ நடந்து விட்டது. இப்போது கடிதம் எழுதியிருக்கிறான் கொடைக்கானலிலிருந்து அந்த குடும்பத்துக்கு ஏதாகிலும் பணம் கொடுத்து ஊரைவிட்டு அனுப்பிவிடுங்கள்’ என்று, எனவே, மிராசுதார் தன் மகன் திருந்திவிட்டான் என்ற திருப்தியோடு கடிதத்தை அவன் அன்னையிடம் படித்துக் காட்டினார். அந்த அம்மை, “அகிலாண்டேஸ்வரி, மலையப்பனுக்கு இந்த நல்ல புத்தியைக் கொடுத்தாளே” என்று மகிழ்ச்சியோடு பிரார்த்தித்தார்கள், தாயம்மாளின் பிரார்த்தனை என்னவென்று, அந்த அம்மைக்கு என்ன தெரியும் ?

கருவுற்ற காரிகை, உடல் மெலிந்து, ஊண் உறக்கமிழந்து, கவலையால் தாக்குண்டு படுக்கையிலேயே புரண்டு தன் நிலையை எண்ணிப் பயந்து, ஊர் தூற்றுவது கேட்டு மிரண்டு என்ன செய்வதென்று தெரியாது வாடி, “மாரி-

4