பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மன்: போடி பைத்தியக்காரி! பணக்காரரை எல்லாம் பார்த்துப் பரிகாசம் பண்ணிக்கிட்டு அல்லவா நிலா இருக்குது. எவ்வளவு பெரிய கோடிஸ்வரனாக்கூட இருக்கட்டும்டி, ஏழையின் குடிசையிலே, நிலா வெளிச்சம் தெரியுது பாருடி. அதுகிட்ட பணக்காரன் வீட்டிலே இருக்கே எலக்ட்ரீ விளக்கு, அது என்னாடி செய்யும்.நிலாதாண்டி, ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் இருக்குது. பாரு, மாரி! எம்மா அழகா இருக்கு... மா அழகாத்தான் இருக்குது. நான் போயிட்டு ஓடியாந் துடறேன். சரி, என்ன பணம் வாங்கி வந்தே, எடு. [புருஷன் பணத்தைத் தருகிறான்.) என்னா இது? எழவாப் போச்சி, ஒத்த ரூபாயைக் குடுத்தா எதுக்குன்னு ஆகும். மன்: (அதைக் கவனியாமல் ) ஒத்த ரூபாயா? ஓங்க அப்பன் நோட்டு நோட்டா நீட்டறானா ? போடி ! இந்தப் பணத்தை வாங்க அந்தப் பயகிட்ட நான் பல்லைக் காட்டினது உனக்கென்னா தெரியும்? மா: அப்பாணையாச் சொல்லு, ஒத்த ரூபாதானா கொடுத்தாரு. மன்: ஆமாண்டின்னா... மா: தெரியுதே இலட்சணம். சொல்லுவானேன். நீங்க நின்ன நிலையிலே ஆடறது சொல்லுதேன்னேன். ஐஞ்சு ரூபா வாங்கி அணியாயமாக் குடிச்சிப்போட்டு என் அடிவயத்திலே நெருப்பைப் போடறியே; மன்: சிச்சீ ! ஐஞ்சுமில்லை, பத்துமில்லை. ரெண்டரைய ரெண்டரே. LOIT: சாராயக் கணக்கையாக் கேட்டேன். மன்: சீ! ரெண்டரை ரூபா கொடுத்தாருடி எசமான். LDIT: மிச்சப் பணம் எங்கே? என்னாங்க அன்யாயம். ஒண்ணரை ரூபாய்க்கா குடிச்சித் தொலைக்கணும். குடித்தனம். உருப்படுமா? மன்: செ,கழுதே! எவண்டி ஒண்ணரைக்கும். இரண்ட ரைக்கும் குடிப்பான். ஒங்க அண்ணனா ஈட்டிக்காரன். மா: ஈட்டிக்காரன் கடனைக் கொடுத்துவிட்டிங்களா? மன்: விடுவானா? எட்டணா தட்டிக்கிட்டுப் போயிட்டான்.

16

16