உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


என்பன போன்ற பேச்சுக்கள் வாலிபர்களுக்கு இனிப்பாக இரா.

🞸🞸🞸

வாலிபர்கள் நடமாடும் எஃகுக் கம்பிகள், அகத்திலே அருவிபோல் ஆர்வம், முகத்திலே வீரக்களை, செயலிலே துடிதுடிப்புக் காணப்படும். தலை குனிந்து நிற்பது பெருமூச்செறிவது, நம்மால் முடிகின்ற காரியமா என்று இழுத்துப் பேசுவது, ஆகிய முறைகள் அவர்களுக்குப் பிடிக்காதன. அவர்கள் செயலாற்றும் வீரர்கள்.

🞸🞸🞸

உரிமைக்காகப் போராடிய உத்தமர்கள், அக்கிரமங்களை அழிக்க அனைத்தையும் அர்ப்பணித்த தியாகிகள், மக்கள் வாழ உழைத்த மாவீரர்கள், ஆகியோர் பற்றிய வரலாறு படித்தறிந்த அவர்கள் சிந்தனையிலே நம்மாலாவதென்ன பராபரமே, என்ற பஜனைப்போக்கு ஏற்பட முடியாதல்லவா? ஆகவேதான் வாலிபர்கள் விறுவிறுப்புடன் காணப்படுகின்றனர்.

🞸🞸🞸

என் நாடு பொன்னாடு; எங்கும் இதற்கு இல்லை ஈடு என்று மார்தட்டுகிறான் வாலிப வீரன், நாட்டின் நிலை உயர வேண்டும்; வளம் பெருக வேண்டும். செல்வம் வளர வேண்டும்; தொழில் செழிக்க வேண்டும்: ஒருவர் ஒருவரை அடக்குவது; சுரண்டுவது; மேல் கீழ் என்று பேதம் காட்டுவது; விசாரத்தோடு விண்ணை அண்ணாந்து பார்ப்பது; வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று வேதாந்தம் பேசுவது; பிறவா வரம் தாரும் என்று சலிப்புச் சிந்து பாடுவது ஆகிய போக்கு