பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


வந்தோர், நீரிலே நெருப்பின் சக்தியைக் கண்டறிந்தோர், அனைவரும் நம்போல் மனிதரே. அவர்களால் முடிந்தது நம்மால் ஆகும் என்ற நினைப்பு அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாயிற்று. அவைகள் சாத்தியமான போது மேடைப் பேச்சு ஏன் சாத்தியமாகாது.

🞸🞸🞸

பேசாமல் இருப்பது வேண்டுமானால் சிரமம்--சிந்தனையை அடக்கியே சும்மா இருப்பதரிது--பேசுவது எளிது--பேசுவதை, ஒழுங்குக்கும் முறைக்கும் கட்டுப்படுத்துவதுதான் மேடைப் பேச்சு.

🞸🞸🞸

இந்நாளில் மேடைப் பேச்சுக்குத் தேவையும் பயனும் உள்ளது என்பது உணர்ந்து, அதனை நாமும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்வது முதல் வேலை.

🞸🞸🞸

வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பிரச்சினைகளைப் பற்றி, மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது, மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது, மக்கள் கவலையற்று இருந்தால், பிரச்சினையின் பொருப்பை உணரச் செய்வது, போன்ற காரியமே மேடைப் பேச்சு.

🞸🞸🞸

'சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்' அவன் நாவில் என்று புகழ்வதும், 'தம்பி என்னடா சண்டப் பிரசண்டமடிக்கிறார்--வீசு மலைப்பிஞ்சுகளை என்று ஏசுவதும் ஏககாலத்தில் நடைபெறும் விநோத புரியிலே இருக்கிறார் மேடைப் பேச்சாளி.

🞸🞸🞸