உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா காவியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அண்ணா காவியம்


அண்ணாவின் அறவழியும் பெரிய நோக்கும்
அனைவரையும் கவர்ந்ததாலே, தமிழ மக்கள்

கண்ணாக இக்கழகம் போற்றும் வண்ணம்,
காசுதந்தும் ஆதரித்தும் வளர்க்க லானார்,

எண்ணாத அளவுக்குக் கிளைகள் தோன்ற,
ஏராள உறுப்பினரும் பெருகக் கண்டு,

புண்ணாகும் நெஞ்சத்தோ டாட்சி யாளர்
பொறாமையுடன் உற்றுநோக்கிக் கண்கா ணித்தார்!



எதிரிகளுக் கிடங்கொடாமல் சொன்னார் அண்ணா:-
"இரண்டுகுழல் துப்பாக்கி யாய்வி ளங்கிச்

சிதறடிப்போம், அய்யாவும் நானும்! எங்கள்
சிந்தனைகள் ஒன்றேதாம்; செயல்இ ரட்டை!

உதிரிகளும், தென்னாட்டார் இரத்த மெல்லாம்
உறிஞ்சிவரும் அட்டைகளும் ஒட வேண்டும்!

முதிராது பொதுவாழ்வில் இறங்க வில்லை!
முதுமையுறாச் சிறுவர்தாம் என்றெண் ணாதீர்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/106&oldid=1079749" இலிருந்து மீள்விக்கப்பட்டது