பக்கம்:அண்ணா காவியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறப்போர்க்காதை
109

"குடத்திலிட்ட விளக்கனைய குணவா னெல்லாம்
குன்றிலிட்ட விளக்காக உயர்ந்த பின்னர்

முடத்தென்னை போலானார்; மோசம் போனோம்! :முழுப்பயனை எதிரிகளுக் களித்து விட்டார்!

இடத்தைத்தந் தேமாந்தோம்! எதிர்கா லத்தில்
எச்சரிக்கை கொள்வதற்குப் பாடங் கற்றோம்!

புடத்திலிட்ட தங்கமென ஒளிர்வ தற்குப்
போராட்டத் தீக்குதிப்போம்" என்றார் அண்ணா!




"திருத்தணியில் எல்லைமீட்கும் போராட் டத்தில் :தீவிரமாய் இறங்கிநின்ற சிவஞா னத்தை

உரத்தகுரல் நேருபிரான் 'முட்டாள்" என்றார்;
உடன்தொடங்கு புகைவண்டி நிறுத்தப் போர்தான்!

கருத்தெரியக் குலக் கல்வித் திட்ட மொன்றைக்
கற்பித்த இராசாசி முதல்வ ராகார்!

பெருத்தமுதல் டால்மியாவின் பெயர ழித்துப்
பின்கல்லக் குடியாக மாற்றித் தீர்வோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/111&oldid=1079765" இலிருந்து மீள்விக்கப்பட்டது