பக்கம்:அண்ணா காவியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரியணை ஏறிய காதை


தென்சென்னைத் தொகுதியிலே நாடாள் மன்றத் :தேர்தலிலே ஏன் அண்ணன் ஈடு பட்டார்?

தன்செயல்கள் நாடுமுற்றும் பரவ லாகத்
தம்பியர்க்குக் கிடைப்பதற்கே வாய்ப்பாம் என்றே!

என்செயலால் படுத்துக்கொண் டேசெ யிப்பேன்’ :என்றுளறிக் காமராசர் தோற்றுப் போனார்!

வன்செயலால் கலைஞரையும் கொல்லப் பார்த்தார்,
வாக்கிழந்தார் அமைச்சராக வீற்றி ருந்தார்!




செல்வாக்கு வளர்ந்துளதா என்ப தெல்லாம்
தெரிவிக்கும் வாக்கெண்ணும் திருநாள் தன்னில்

நல்வாக்குத் தொடர்ந்துவர அண்ணன் முன்னால்
நாங்களெல்லாம் அமர்ந்து, களிப் போடி ருந்தோம்!

பொல்லாத வானொலியோ தொடர்ச்சி யாகப்
பூரிக்கும் வெற்றிகளாய்க் கூறக் கூறச்

சொல்லவொணாத் துயர்சூழத் துடித்தார் அண்ணா
"தோற்றிருக்கக் கூடாதாம் காம ராசர்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/145&oldid=1080009" இலிருந்து மீள்விக்கப்பட்டது