பக்கம்:அண்ணா காவியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அண்ணா காவியம்


உண்ணுவதும், உறங்குவதும், உணர்வெழுந்தால்
உல்லாசம் தேடுவதும் விலங்குப் பண்பாம்,

எண்ணுவதும், எண்ணியதைத் திண்மை யோடே
எடுத்தவுடன் செயலாற்றத் துடித்த லுந்தான்

கண்ணியமாய் வாழ்கின்ற மனிதப் பண்பாம்,
கருத்திலிதை மறவாமல் இருத்திக் கொண்டால்,

அண்ணனவர் சொன்னபடி நடந்தோ ராவோம்!
அருந்தாய கத்துக்கே கடமை யாற்ற




மனிதரெனப் பிறக்கின்றோம்! அதைம றந்து,
மனைவி மக்கள் புடைசூழ வாழ்கின் றோமே!

இனிதான பல்சுவைகள் துய்க்கின் றோம் நாம்;
எள்ளளவும் பிறர்க்கிவற்றால் பயன்களுண்டா?

புனிதமான எதற்கேனும் விரல சைத்துப்
புகழொளியைச் சிறிதேனும் பாய்ச்சி னோமா?

தனியொருவன் சூரியன்போல் தமிழ்வானத்தில்
தகத்தகா யம்செய்தான் அறுப தாண்டில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/164&oldid=1080240" இலிருந்து மீள்விக்கப்பட்டது