பக்கம்:அந்தித் தாமரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


சரி!...... அவனுக்கு உண்மையிலேயே மனைவி என்னும் ஒருத்தி இல்லவே இல்லையென்றால்...?

வேர்வை சொட்டச் சொட்ட வெளியே வந்தான் காமதேவன். அவனுடன் போலீஸ் ஜவானும் வந்தார். மேஜைகது முடித்து வைக்கப்பட்டிருந்த துண்டு ஒன்று தென்பட்டது. அவிழ்த்தான் காமதேவன். நாடகக்காரரின் முடிகொண்ட டோபா”வும் நூற்றி எழுபத்தைந்து ருபாயும் இருந்தன !

காமதேவனின் இதயம் கலங்கியது. கண்ணிர் வழிந்தது. இப்படிப்பட்ட அதிசயத்தை எண்ணினுல், அரிச்சந்திரன் பரம்பரை ஒன்று, மனச்சாட்சி இழந்தவர் களு க்கு மத்தியிலும் உருவாகுமென்றுதானே புலப்படு: கிறது!...” என்று எண்ணினன் அவன்.

டாக்டர் மோஹனசுந்தரத்தைத் தேடிச் சென்றன் காமதேவன். அரைமணி கழித்தே அவர் வந்தார். காரில் வரும்போது அவர் சோன்னர்: “மிஸ்டர் காம தேவன்!...திருடர்கள்கூட மனச்சாட்சிக்குப் பயந்து கடக்கத் தொடங்கியிருக்கிறர்கள். ஒருவன், என்னிடம் வந்து, தான் யாரிடமோ நூற்றெழுடத்தஞ்சு ரூபாய் திருடி, அப்பால் அவரிடமே கொடுத்துவிட்டு ஓடி வந்ததாகவும், தன் உயிருக்கு உயிரான மனைவியின் காய்ச்சலைக் குணப்படுத்தவே அப்படிச் செய்ததாயும் அழுது புலம்பினன். எனக்கே மனசு தாளல்லே. அவனே யும் அவன் கண்ணிரையும் கம்பி, போய்ப் பார்த்தேன். நிஜமாகவே அவன் மனைவி சாகப் பிழைக்கத்தான் கிடந்தாள். என் கடமையைச் செஞ்சிட்டுத் திரும்பி னேன். எனக்கும் மனசுக்கு கிம்மதியாயிருக்குது.

அந்தி-3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/39&oldid=1273063" இலிருந்து மீள்விக்கப்பட்டது