பக்கம்:அன்னை தெரேசா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 அன்பு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது; உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! - டிசம்பர் 19, 1933 : சென்னையில் நடந்த தென் மண்டல காங்கிரஸ் கட்சி மகாநாட்டில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, கடற்கரையில் பொதுக் கூட்டத்தில் பேசும் போது, மகாத்மா காந்தி இந்திய நாட்டின் சுதந்தரத்துக்காகப் போராடிய பொழுது: பாட்டாளிகள், விவசாயிகள், ஏழை எளிய மக்கள் அனைவருமே பெரும் சக்தியாக இயங்கினர்கள். அதல்ை தான். ஆயுதம் இல்லாமல் தரும வழியில் விடுதலே பெற்ருேம். அதன் பயனை எல்லா மக்களும் பெறவேண்டு மென்பதற்காகவே, திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிருேம்; நாட்டின் உயர்வுக்கான திட்டங்களின் வளர்ச்சியின் மூலம்தான் நாட்டின் ஏழை எளியவர்கள் வாழ்வும் வளமும் பெறுவது சாத்தியமாகும்!’ என்று குறிப்பிட்டு, ஏழை மக்களின் எதிர்கால நலன்களில், தமது ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்து விட்ட ஆர்வத்தையும் அக்கறையையும் புலப்படுத்தினர். நாட்டில் நலிவுற்றுப் பின்தங்கிச் சீர்கெட்டுக் கிடக்கும் ஏழைச் சமூகத்தினரின் வாழ்வு மலர்ந்து சீர்பெற்றுச் செம்மைப் படுவதற்கான செயல் முறைகள் உள்ளிட்ட நாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு ஐந்தாண்டுத் திட்டன் களைக் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்திய அரசு இதுவரை நடைமுறைப் படுத்தியுள்ளதையும், நடப்பு ஆருவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கென ரூ 1,16,240 கோடி செலவு செய்ய இந்திய அரசு மொத்தமாகத் திட்ட மிட்டுள்ளதையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கும் எழுபது கோடி (1981) இந்திய மக்களின் நெஞ்சங்களி லெல்லாம் பிரதமர் வெகுவாகவே உயர்ந்து நிற்பதும் அகில உலக இயல்முறைச் செய்தியாகவே அமையக்கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/159&oldid=736298" இலிருந்து மீள்விக்கப்பட்டது