பக்கம்:அன்னை தெரேசா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அன்பு மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது? உண்மை தான்! அவர்களுக்கு உணவைவிடவும் அன்புதான் மிகமிக அதிகப்பட்ச அளவில் அவசியம் ஆகிறது. ஆகவேதான் ஏழைகளில் மிகமிக ஏழைகளுக்காகவே நாங்கள் பொதுமையில் அன்புச் சேவைகளைச் செய்து வருகிருேம்!" 'அன்னேயே, உங்களது அன்புத் துதுவர்கள் இயக்கம் உண்மையிலேயே ஏழைகளுக்கு ஒர் அமுதசுரபியாகவும். ஒரு காமதேனுவாகவும் ஒரு கற்பகத் தருவாகவுமே விளங்கி வருகிறது!-ஆஞல், பிச்சைக்காரர்களுக்கு உண்டி கொடுத்து, உடை கொடுத்து, நிழலும் கொடுத்துத் தாங்கள் ரட்சிப்பதன் விளைவாக, தாங்கள் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்கவில்லையென்றும், அ. த ற் கு ப் பதிலாக, தாங்கள் ஏழைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வருவதாகவும் ஒரு சிலர் பேசி வருகிருர்களே?" 'அட கடவுளே! இன்றைய உலகத்திலே, அப்படிப் பேசுகிற ஏதோவொரு கூட்டம் ஏழை எளிய மக்களைப் பதனழியச் செய்து கொண்டிருக்கலாம்! மற்றவர்களில் ஒவ்வொருவரும் பணக்காரர்களைத் தானே கெடுத்து வரு. கின்றனர்!’ அன்னை நயமாகவும் விநயமாகவும் புன்னகை செய்கிருர்கள்: "நாங்கள் ஏசுவின் பணியாளர்கள். எங்கள். கடன் அன்புப்பணி செய்வதே!' r "சரி, இந்தியாவின் ஏழ்மை நிலைக்குக் காரணம் srašteorsirrtë??? "சமத்துவமின்மை! - இன்றைய உலகத்தில் எங்கே பார்த்தாலும் நிலவி வருகின்ற உயர்நிலை - தாழ்நிலை என்கிற ஒப்பின்மைப் போக்கு த்தான் வறுமைப் பசிக்கு உரித்தான காரணமாக அமைந்திருக்கிறதென்றும் சொல்ல லாம்! - நமது இந்திய நாட்டிலே, நாமெல்லோரும் ஏழைகளாகவே இருக்கிருேம். ஏனென்ருல், நீங்களும் தானும் பொருட்களை இங்கே பங்கிட்டுக் கொள்வதில்லை! - ஆதலாலேதான், நான் மேல்; நீ கீழ்!” என்ற பாரபட்ச நிலை. பசி, வறுமை காரணமாக இங்கே அதிகமாகவுே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/29&oldid=736338" இலிருந்து மீள்விக்கப்பட்டது