உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை தெரேசா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அந்த நாள்...! உலகச் சரித்திரத்தின் ஏடுகளிலே பெருமைகளை சித்திர விசித்திரமாகக் கூட்டிக் குவித்திருந்த பழம் பெரும் நாடான பாரத நாட்டைச் சேர்ந்த மேற்கு வங்காளத்தின் தலைநகரான கல்கத்தா நகரத்தின் பாரம்பர்யச் சீர்மை பெற்றிருந்த புனிதமான மண்ணை மிதித்த நேரத்தில்,இனம் புரியாததோர் அமைதி தன்னுடைய இளம் பருவத்து நெஞ்சத்தில் படரத் தொடங்கிய புனிதமானதோர் அதிசயத்தையும் கன்னிகை அக்னெஸ் உணரத் தவறவில்லை தான்! டார் ஜிலிங் மலை நகரத்தில் நடைபெற்று வந்த லொரேட்டோ கன்னியர் மடத்துப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்டபின், கல்கத்தாவில் இயங்கி வந்த லொரேட்டோ கன்னிமார் திருச்சபையில் இணையலானர் கன்னித் துறவி அக்னெஸ். ஆன்ம நலம் சாந்தி அடையத் தொடங்கிய நிலையில்ே , அக்னெஸ் வங்க மொழியையும் பயிலத் தொடங்கி யிருந்தார்!- அமி என்ருல் நான்', 'டுமி’ எனில் நீ" என்பது போன்ற பதங்களெல்லாம் அவரது கன்னிப் பூ மனத்தில் பதச்சோறுகளாகவே சுவைத்தன. கல்கத்தா நகரில், .ெ லா .ெ ர ட் டோ பள்ளிகள் செல்வாக்குப் பெற்றவை. அங்கேதானே, கீதாஞ்சலிக் குருதேவரின் அருமை மகள்கூடப் படித்தார்! இப்போது: புனிதமேரி உயர்நிலைப்பள்ளியில் அக்னெஸ் ஆசிரியை ஆளுர்-வயிற்றுப் பிழைப்பிற்காக மேற்கொள்ளப்படும் தொழில்கள் எல்லாவற்றிலும், படிப்புப் போதிக்கும் பணிய்ையே அவர் பெரிதும் விரும்பினர். லொரெட்டோ என்டலியின் (Loretto Endaly) அமைதிச் சூழில் வங்காளிப் பிரிவில் அவர் ஏற்றிருந்த போதனைத் தொழிலில் நாட்கள் ஓடின! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/43&oldid=736354" இலிருந்து மீள்விக்கப்பட்டது