பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுடைய அத்தை கோசலை அம்மாள் அவளிடம், ‘மேகலை, தம்பி ஒரு மாதிரி இருக்கானே, ஏன் உனக்குத் தெரிஞ்சிருக்குமே. 1. புதுசா வந்திருக்கிற விருந்தாளியை கை நீட்டி அடிக்கக் கூடப் போயிட்டானமே, ஏம்மா? என்று ஐயம் கொண்டு கேட்டதையும் அவள் நினைத்தாள். அவளுடைய இதயமாகிய குளம் கலக்கப்பட்டுச் சகதியானது தான் மிச்சம், விடிவு கிடைக்காதா வென்று ஏங்கியலைந்த பேதை மனம் வடிகாலாக மாறியது தான் மிச்சம். வாழ்க்கை வளையத்திற்குள் தலையை நுழைப்பதற்கு முன் அது பொன்னாபரணமாக விளங்கும், தலையைப் பணயம் வைத்த பிற்பாடு அது இரும்பு விலங்காக மாறும். அவள் அனுபவம் காட்டியது இம் முடி வே. முதல் இரவின் மணம் இன்னும் அவளுள்ளே தேங்கியிருந்தது, அதற்குள் அவளுக்கு புது வாழ்க்கை அச்சம் நிறைந்து தென் படலாயிற்று. தலை வெடித்துச் செத்த அசுரன் ஒருவனின் கதையைப் பாட்டி கூறியது ஞாபகம் வந்தது. அம்மாதிரி தன் தலையும் சுக்கல் நூறாகச் சிதறி விட்டால் கூடத் தேவலையென்று பட்டது.

ஒவ்வொரு இரவும் தனக்கும் தன் அன்பு அத்தானுக்கும் இடையில் உள்ள நடு வெளியைத் துரர்த்து, நெருக்கத்தை உண்டு பண்ணும் என்று அவள் கற்பனை செய்தது மெய். மெய் களவாடப்பட்டதா ? அல்லது, கானல் நீராகி விட்டதா ?

அலாரம் கடிகாரம் மேகலையை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அத்தான் இவ்வளவு நேரமாகியும் ஏன் வரவில் ജ്ജ?....” தனிமையில் வாடி, கூண்டுக் கிளியாக மனம் நொந்து, மெய் குலைந்தாள் பெண்டு.

வெண்ணிலவும் வீசுந் தென்றலும் அவளுக்குத் தாலேலோ பாடத் தொடங்கின, அதே சமயத்தில், அயல்