பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலிவேட்டையாட விடமாட்டார்கள்!

பழைய காலத்தைப் போலவே இன்றும் புலிவேட்டையாடி காதலிக்குத் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக் கண்டுபிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலியிடம் காட்டி, "பெண்ணே" இதோபார். நானே வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா! இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் தாலியாகக் கட்டுகிறேன். என்று கூறுவதனால் எத்தனை பெண்கள் 'சரி' என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!

புலியைக் கொன்றேன். இதோ அதன் பல்! அதன் அளவைப் பார்! நகததின் கூர்மையைக் கண்டாயா? என்று கேட்கும் காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?

காதலனிடம் சிக்கிய காட்டுப் புலிக்கே இந்த கதி ஏற்பட்டு விட்டதே! இப்படிப்பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.